பக்கம்:தரும தீபிகை 7.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2585. காந்தும் காங்கிலன் கண்ணுக்கும் தோன்ருன் பரந்த சடையன் பசும்பொன் கிறத்தன் அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. (3) (திருமந்திரம்) அருந்தவம் புரிவோர் பிறவியை நீக்கும் பெருந்தகையாளர்; அவரது சிங்தையுள் சிவன் உவந்துள்ளான்; அவரே அவனே எளிதில் காண வுரியவர்; இன்ப நிலையினர் எனத் திருமூலர் இவ்வாறு கவசிகளின் மகிமையை விளக்கி யிருக்கிரு.ர். வெளியே உலக நாட்டமாய் ஒடி உழல்வது உடலை வளர்க்க நேர்க்க ஊன நிலை; உள்ளே ஞான நாட்டமாய் நாடி கிற்பது உயிரை உயர்க்க வாய்ந்த தவநிலை, உறுதிநிலை கருதி உயர்க. தன்னை அறிதல் தவம் என்றது தவத்தின் பயனையும் கயனே யும் விளக்கி கின்றது. தனது சீவனை நேரே தெரிசிக்க நேர்ந்த வன் நித்திய முத்தன் ஆகிருன். ஆகவே ஆனந்த யோகமாம். வெளி விடயங்களில் மனம் விரிது செல்லும் அளவும் மனிதன் இளிவடைகின்ருன். சகமுகமாய் அங்கனம் செல்லா மல் அகமுகமா அ.தி குவிந்துவரின் அசி தி சொரூபமாய் உயர்ந்து விளங்குகிருன். உயர்வும் தாழ்வும் உளத்தால் உளவாகின்றன. விரிந்த நெஞ்சம் கருவியாம் விடயம் உணா, விரியாமல் ஒருங்கு கெஞ்சம் கருவியாம் கன்னே உணர, ஒருங்காமல் விரிந்தநெஞ்சம் உடையவனே விடாது பிறவி என்று உணர்க; ஒருங்குகெஞ்சம் உடையானே உருது பிறப்புஎன்று உணர்கவே. (பிரபுலிங்கலீலை, மைேலயம் 11) பிறவி ஒழியும் வழியை இது விழி தெரிய விளக்கியுள்ளது. பொருளை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவகில்ே யில் விரிந்து ஓடாமல் தவநிலையில் ஒடுங்கி நிற்கும் உள்ளமே தன்னை அறிய வல்லது. அவ்வாறு அறியின் வெவ்விய பிறவி சிங்கிக் திவ்விய ஆனந்தம் ஓங்கித் தேசு மிகுந்து கிற்கும் என்க. வல்லேயிலா இன்பம் எதிர்வருமே இன்னுயிரை ஒல்லே யுனா வுறின் உன்னே உணர்ந்து உய்தி கானுக. 324

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/276&oldid=1327237" இலிருந்து மீள்விக்கப்பட்டது