பக்கம்:தரும தீபிகை 7.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2586 த ரும தீபிகை 964. பொன்னே நெருப்பில் புடமிட் டதுபோல உன்னைத் தவத்தில் உறுத்தில்ை-பின்னேயிந்த வையகமும் வானகமும் வாழ்த்த உயர்ந்துே மெய்யின்பம் காண்பாய் விரைந்து. )حى( இ-ள். தங்கத்தை நெருப்பின் இடையே வைத்துப் புடம் இடுதல் போல் உன்னைத் தவத்தின் நடுவே வைத்து வந்தால் உனது சீவ ஒளி எங்கும் பரவி எவ்வழியும் திவ்விய சோதியாய் விளங்கும்; விளங்கவே வானும் வையகமும் உன்னே வந்த வணங்கும்; மெய் யான பேரின்பத்தை மேவி நீ மகிமையாய் மகிழ்வாப் என்க. ஆன்மா இயல்பாகவே மேன்மை யுடையது ஆதலால் அது உயர்வான பொன் என நேர்ந்தது. இரும்பு பிக்களை ஈயம் செம்பு வெண்கலம் முதலிய இழிக்க உலோகங்கள் எவற்றினும் உயர்ந்து பொன் பொலிவடைந்துள்ளது; அது போல் விலங்கு பறவை முதலிய தாழ்ந்த பிராணிகள் யாவினும் சிறந்து மனிதன் மகி மை அடைந்துள்ளான். அரிய மாட்சி பெரிய காட்சியாயது. பொன்னைப் போல் இன்னவாறு உன்னத கிலேயில் வங் திருந்தாலும் பழகிவக்க வாசனைகளின்படி பழுது அடைந்து கழி கிருன். அந்த இழிவுகள் விழுமிய எண்ணங்களாலும் மேலான செயல்களாலும் விலகி ஒழிகின்றன; ஒழியவே அவன் பழைய நிலையில் உயர்ந்து திகழ்கிருன். அழுக்கை நீக்கி ஒழுக்கம் உயர் ":HtT) Gl/ அருளுதலால் .தி, தி உயிரினும் ஒம்ப வரியது என ஒளி மிகப் பெற்றது. தழுவிய சீலம் எழுமையும் இன்பம் தருகிறது. விழுமிய விரத சீலங்களை இனிது மருவிவரும் புனித கிலேயே தவம் என வந்தது. அது மனிதனைத் தெய்வம் ஆக்கும் மகிமை வாய்ந்தது. தவம் தழுவி வருகிறவன் சிவம் தழுவி வருகிருன்சேமாப் படிந்த மாசுகளை எல்லாம் அறவே நீக்கித் தேசு படியச் செய்து சீவனை ஈசன் ஆக்கியளுருதலால் தவம் தெய்வ வேதி எனச் சீர்மிகுந்து கின்றது. தவம் படியச் சிவம் படிந்து தனி நிலையில் இனிது அமர்ந்தான் என ஒரு தவசி பிறவிநீங்கிப் பேரின் பம் பெற்ற படியை இது இப்படி இனிது விளக்கியுள்ளது. பாவத்தின் பயனய்ச் சீவனை வருத்துகிற நோய் துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/277&oldid=1327238" இலிருந்து மீள்விக்கப்பட்டது