பக்கம்:தரும தீபிகை 7.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2589 பொன்னத் தீயிடைப்பெய்தல்அப் பொன்னுடைத் தூய்மை தன்னைக் காட்டுதற்கு என்பது மனக்கொளல் தகுதி உன்னேக் காட்டினன் கம்பினுக்கு அரசிஎன்று உலகில் பின்னேக் காட்டுதற்கு அரியதுஎன்று எண்ணியிப் பெரியோன். (இராமா, மீட்சி 128) தன் நாயகன் எவியபடி மூண்ட தீயுள் மூழ்கி மீண்டு அனயளாய் வந்த சீதையைத் தசரதன் இவ்வாறு தேறுதல் கூறி ஆறுதல் செய்துள்ளான் பொன்னத் தீயிடைப் பெய்வது அதனைத் தாய்மை செய்யவே; அதுபோல் உன்னத் தீயிடை யிட்டு மகாபதிவிரதையான உனது தாய்மையை உலகம் அறியக் காட்டி உன் கணவன் உவகை மீக் கூர்ந்தான் என மாமன் உரைத்த மதிமொழியைக் கேட்டு அக் கோமகள் பேருவகை கொண்டாள். பொன் என்பது இலட்சுமிக்கு ஒரு பெயர்; அது அவளது அவதாரமான சீதைக்கு இங்கே உவமையாப் வங் திருப்பது உவகையை வினைத்து உரிமையை உணர்த்தியுள்ளது. தவத்தால் பாவம் நீங்கி ஒழிகிறது; புண்ணியம் ஓங்கி விளைகிறது; தவமுடையவன் எண்ணியன யாவும் எளிதே எய்தி மகிழ்கிருன். அது அதிசய சோதியாய் ஆனந்தம் அருளுகிறது. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் கில்லாதாம் பாவம்-விளக்குகெய் கேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு கல்விஅன தீர்விடத்து கிற்குமாம் இது. (நாலடி, 51) ஒளி மிகுந்த விளக்கு எனக் கவத்தை இது விளக்கி யுள்ளது. மாய மருளான தீய இருளை நீக்கிப் பேரின்ப கி லே ைய அருளுவது ஆதலால் அரும் பாடுபட்டுக் கடுந்துன்பங்களைச் சகித்துப் பெரியோர்கள் இதனைப் பேணி உப்கின்றனர். சுக போகங்களை யெல்லாம் ஒருங்கே வெறுத்துப் பொறிகளை அடக் கித் தனியே இருந்து அரிய தவம் புரிவது எவ்வளவு அருமை என்பதைச் சிறிது சிக்தித்தாலும் எளிதே உணர்ந்து கொள்ள லாம். செய்யும் தவத்தில் தெய்வக் கேசுகள் விசுகின்றன. கனக்குக் கவவாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி ஒரு பெரியவர் வேண்டியிருக்கிருர், அக்க வேண்டுகோள் நிஜல யை பண்டு அவசியம் நாம் அறிய வேண்டும். அயலே கானுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/280&oldid=1327241" இலிருந்து மீள்விக்கப்பட்டது