பக்கம்:தரும தீபிகை 7.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2599 மகிமைகளை எய்தி வியன விளங்குகிருன். அவை இலையேல் பேடி, உலோபி எனப் பிழை படிந்த இழிவாய் ஒழிகிருன். புலவன் என்பவன் தலைமையான கலையறிவை யுடையவன். அங்க அறிவு சீலத்தோடு தோய்ந்துவரின் அவன் சாலச் சிறந்த வனப் உயர்ந்த திகழ்வான்; ஞாலமும் அவனே கி. வந்து புகழ்ந்து வரும். ஒழுக்கம் இல்லையேல் இழுக்கமா.அவனே எவரும் இகழ்ந்து விடுவர் விழுமிய சீலம் நழுவிய அளவு புலவன் புல்லன் ஆகிருன். புலமையாளன் ஒழுக்கத்தால் ஒளி பெறுகிருன். தலைமையான அரசன் வீரத்தால் விழுப்பம் உறுகிருன். தவசி மெய்யுணர்வினல் மேன்மை அடைகிருன். என்றும் நிலையாய் நிலவும் மெய்ப்பொருள் ஒன்று உள்ளது: எல்லாம் வல்ல அது அதிசய ஆனக் கமாய் பாண்டும் நிறைக் திருக்கிறது. அங்க உண்மைப் பொருளை உணர்ந்து தெளிவதே கத்துவ ஞானம் என விளங்கியுளது. மெய்யான இந்த ஞானம் கோய்ந்து வரும் வழியே தவம் வானம் கோய்க்க ஒளியாய் வயங்கி மிளிர்கிறது. சிவம் மேவிய சவமே தவம் ஆகிறது. தானம் கழுவிய கருமம்போல் ஞானம் மருவிய தவம் நயமாய் வியன் உறுகிறது. அரிய தவசி பெரிய ஞானியாப்ப் பெருகி வருகிருன். தவம் திண்மையுடையது ஆயினும் உண்மை யுணர்வோடு ஒன்றிய போதுதான் உறுதியாய் உயர்கிறது. ஞானம் தவத்தின் சீவகிலையமாய் அதற்கு இனிமை சுரந்து தனி மகிமையை அருளுகிறது. அது இல்லையேல் இது இளிவுறுகிறது. ஞானம் இல் லாதவை ராக்கியம் நன்றல்ல கானவர்க்கும் நோயினர்க்கும் கள்ளர்க்கும்-ஆனதுவென் எங்கிலேக்கே கின்ருலென் எவ்விடயத்து ஏய்ந்தாலென் தன்னிழப்பே இன்பாம் தலம். (ஒழிவிலொடுக்கம்) கடுமையான விரதங்களைக் கைக் கொண்டு கானகத்தில் இருந்தாலும் ஞானம் இல்லாதவன் நல்ல தவம் உடையவன் ஆகான் என்பதை உதாரணங்களோடு இது விளக்கியுள்ளது. காட்டில் வாழுகின்ற வேடன் கனி காப் கிழங்குகளைத் தின்னு ன்ெருன்; பனி வெயில் மழை முதலியவற்றைச் ச கி த் து க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/290&oldid=1327251" இலிருந்து மீள்விக்கப்பட்டது