பக்கம்:தரும தீபிகை 7.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2602 த ரும தீபிகை தனக்கு வேண்டும் என்று மனிதன் யாண்டும் வேண்டி கிற்பது இன்பத்தை; வேண்டாம் என்று வெறுத்த விலகுவது துன்பத்தை. அல்லலான துன்பங்கள் யாவும் நீங்கி நல்ல இன் பங்களே அடைய வுரிய வழி இங்கே விழி தெரிய வந்தது. தவத்தால் மாசுகள் ஒழிகின்றன; தேசுகள் விளைகின்றன; விண்யவே ஈசன் அருளேத் தவசி எளிதே பெறுகின்ருன். அல்லல் களை ஒழித்து நல்ல சுகங்களை நல்கி எல்லா நிலைகளிலும் உயர்த்தி வருதலால் தவம் ஆன்ம அமுதமாய் அமைந்து கின்றது. அடங்கருங் தோற்றத்து அருந்தவம் முயன்ருேர்தம் உடம்பு ஒழித்து உயர்உலகம் இனிது பெற்ருங்கே. (கலி, 188) அரிய தவத்தை முயன்றவர் உயர்ந்த கதியை அடைவர் என நல்லந்துவனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் குறிக் திருக்கிருர். தன்னைத் தழுவி நின்ற மனிதனைத் தெய்வம் ஆக்கி மேலான விண்ணுலக போகத்தைத் தவம் சால்போடு அருளும் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். இல்லியலார் நல்லறமும் ஏனேத் துறவறமும் கல்லியலின் நாடி உரைக்குங்கால்--கல்லியல் தானத்தால் போகம்; தவத்தால் சுவர்க்கமாம்: ஞானத்தால் வீடாக காட்டு. (சிறுபஞ்சமூலம் 56) இல்லறம் துறவறம் தானம் தவம் ஞானம் ஆகிய ஐவகை கிலேகளை இது காட்டியுள்ளது. தவத்தால் சுவர்க்க போகம் கிடைக்கும் எனக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை அருமைகொள் விடுபேறு அடைந்து ளோர்சிலர்: திருமை கொள் இன்பினில் சேர்கினருேர் சிலர்: இருமையும் ஒருவரே எய்திைேர் சிலர். (1) ஆற்றலின் தம்உடல் அலசப் பற்பகல் - கோற்றவர் அல்லரோ துவலல் வேண்டுமோ தேற்றுகி லீர்கொலோ தேவர் ஆகியே மேற்றிகழ் பதம்தொஅம் மேவும் ருேரெலாம். (2) (கந்தபுராணம்) எவ்வகைப் பொருள்களும் ஈய வல்லது செவ்விய தவமதே தெரியின் வேறிலே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/293&oldid=1327254" இலிருந்து மீள்விக்கப்பட்டது