பக்கம்:தரும தீபிகை 7.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2604 த ரும தி பி கை தன் இனமான மோர்த்துளியைச் சிறிது கழுவினும் பால் கிலைகுலைந்து போம்; பழைய உறவு என்று எளிமையாய் மகளி ரொடு பழகிவரின் பழி படிந்து தவசி இழிவடைந்த விடுவான். எவ்வழியும் யாதொரு இழிவும் நேராமல் தன்னைச் செவ்வை யாப்க் காத்து வருபவனே கிவ்விய கிலையில் சிறந்து வருகிருன். புலையான தொடர்புகள் ஒழிந்த அளவே தவம் ஒளி மிகுந்து உயர்ந்து விளங்கும். அவமாய் அவம் படியாமல் தவம் படிக. காமம் என்றது பெண் ஆசை பொன் ஆசை முதலிய கசை களே எல்லாம் குறித்த கின்றது. அவகேடான இழிவிழைவுகளே அடியோடு ஒழித்தவரே தவயோகிகளாய்த் தழைத்து வருகின் முர். மாசான ஆசைகள் படியின் சேங்கள்கெடிது படிகின்றன. பெண் விழைவார்க்கு இல்லை பெருந்துாய்மை, பேணு துன்ை உண்விழைவார்க்கு இல்லை உயிர் ஒம்பல்-எப்பொழுதும் மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை; மானது தம்விழைவார்க்கு இல்லை தவம். (அறநெறிச்சாரம்) தேக போகங்களை விழைபவர் தவ யோகிளாப் விளைய முடியாத என இது விளக்கியுள்ளது. நெறியான கட்டுப்பாடே தவத்தைச் சரியாக வளர்த்து மகிமையை விளைத்த வருகிறது. வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக மணித்தோடு பெய்து வாண்முகம் திருத்தி கானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய கான்யாற் று வருபுனல் ஆடலும், தேமலர் 5 வல்லிப் பக்தர் வண்டுவாழ் ஒருசிறை கிலமகட் புணரும் சேக்கையும், மரமுதல் மெல்லுரி வெண்துகில் உடையும், கொல்வகைப் படையுழா விளேயுளின் உணவும், மந்திரத்துச் சுடர்முதல் குலமுறை வளர்த்தலும், வரையாஅ 10 வருவிருந்து ஒம்பும் செல்வமும், வரைமுதல் காடுகைக் கொள்ளும் உறையுளும், என்றின் எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனே காக்கும் ஆற்றலொடு வென்றுவிளங்கு தவத்தின் அரசியல் பெருமை 15 மாக்கடல் உடுத்த வரைப்பின் யார்க்கு இனிது அன்று அஃது அறியுநர்ப்பெறினே. = ~ T- == (ஆசிரியமாலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/295&oldid=1327256" இலிருந்து மீள்விக்கப்பட்டது