பக்கம்:தரும தீபிகை 7.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2607 தனது சுயமான ஆன்ம நிலையைக் கருதி வருவது தவமாயப் வருகிறது; ஆன்மா ஒளியும் இன்பமும் உடையது; பரமான்மா வின் இனமான இதனை அணுகி நிற்பவன் உயர்வான கவசி ஆகிருன்; ஆகவே அதிசய நிலைகளே அடைகிருன்; அடையவே உலகம் அவனைத் தொழுது வழிமுறையே வாழ்த்தி வருகிறது. தவநிலையில் எவன் புக நேர்ந்தானே அப்பொழுகே அவனே விட்டு அவதிலைகள் யாவும் அடியோடு விலகி விடுகின்றன; உயர் திலைகள் எல்லாம் அவனிடம் உரிமையா ஒளிசெப்து மிளிர் கின்றன. அவனுடைய கருத்தும் காட்சியும் பரத்தை கோக்கி யே விருத்தியடைந்த நிற்றலால் பரமானக்கங்களை எ னி .ே த அடைந்த மகிழ்கிருன். தவம் கூடக் தனிமுதல் கூடுகிறது. கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்: தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி: வாடித் தவம்செய்வ தேதவம், இவைகளேந்து ஊடின் பலவுல கோர்எத் தவரே? (1) மனத்திடை கின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துப் புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்திடை யாறுஒளி தன் ஒளி யாமே. (திருமந்திரம்) (2) தவத்தின் கிலையையும் அதல்ை அடையும் பலன்களையும் இவை தெளிவா விளக்கியுள்ளன. குறித்துள்ள விளக்கங்கள் துணித்து உணரத்தக்கன. இதயம் குவியத் தவம் உதயமாகிறது. மனமும் மதியும் புனிதமாய்த் தெளிந்தவரின் அவர் முனி வர் ஆகின்ருர், ஆகவே உலகப் புலைகளை நீங்கி உயர் கிலேயில் மும்கி எழுகின்ருர். சீரிய தவம் திவ்விய செறியே மேவுகிறது. ைேர தைஇய உடுக்கையர்; சிரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர்; மாசற இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் 6 என்பெழுந்து இயங்கும் யாக்கையர், கன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்; இகல் ஒடு செற்றம் நீங்கிய மனத்தினர்; யாவதும் கம்ருேர் அறியா அறிவினர்; கற்ருேர்க்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/298&oldid=1327259" இலிருந்து மீள்விக்கப்பட்டது