பக்கம்:தரும தீபிகை 7.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2609 விசும்பு துார்ப்பன வாமென வெயில் என விளங்கும் பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய்! (இராமா, சித்திர 36) சித்திரகூட மலையிலிருந்து அரிய தவங்களைச் செய்து முடித் கவரைப் பெரிய பொன் விமானங்கள் வந்து ஏக்திக் கொண்டு பகதிக்குக் கொண்டுபோகிற காட்சிகளே இது காட்டியுள்ளது. மய்யறு விசும்பில் மண்ணில் மற்றும்ஒர் உலகில் முற்றும் மெய்வினே தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ? கீழோர் செய்வினே காவாய் ஏறித் தீண்டலர் மனத்தில் செல்லும் மொய்விசும்பு ஒடம் ஆகத் தேவரின் முனிவர் போர்ை. (இராமா, குக, 61) பாகனேடு கூடி வந்த தவசிகள் ஒடத்தில் எருமல் ஆகாய மார்க்கமாய்க் கங்கா நதியைக் கடந்து வந்துள்ளனர். அது தவத்தின் மகிமையால் அமைந்தது; ஆகவே மண் விண் முதலிய ன வ்வுலகிலும் தவமே செய்ய வுரியது; அதனைச் செய்தவரே திவ்விய கதிகளை எப்திச் சிறந்து திகழ்கின்றனர் எனக் கவி காயகன் இங்கே உணர்த்தி யிருப்பது ஒர்ந்து சிந்திக்க வுரியது. நஞ்சு குடித்தாலும் நவையின்று தவம் கின்ருல் அஞ்சிஒளித் தாலும் அரண் இல்லே தவம் உலங்தால் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் தவம் மிக்கார் அஞ்சல் இலர் என்றும் அற னேகளே கண் என்பார். (சீவகசிந்தாமணி) தவத்தின் மகிமையை இது வியன விளக்கியுளது. நஞ்சைக் குடித்தாலும் அஞ்சத்தக்க கொடிய அபாயங்கள் சேர்ந்தாலும் தவம் காத்து அருளும்; அதனை யுடையவர் எவ்வழியும் சுகமாய் உப்தி பெறுவர் எனச் செய்தவ வலியை இது உணர்த்தியுளது. இக்ககைய தவத்தை மாந்தர் ஆக்துணையும் செய்து அதிசய கிலேகளே அடைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளா நிருக்கால் பிறவிப் பயனை இழந்த பேதைகளாய் இழிந்து மேதை களால் ல ள்ளப்படுவர். தவத்தால் பவத்துயர் நீங்குகிறது. தவக் கிடை கின்றவர் தாம்.உண்ணும் கன்மம் வெத்திடை கின்றது தேவர் அறியார்; கவக்கிடை கின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை கின்றதோர் பாடது வாமே. (திருமூலர்) 327

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/300&oldid=1327261" இலிருந்து மீள்விக்கப்பட்டது