பக்கம்:தரும தீபிகை 7.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்றெட்டாம் அதிகாரம் த னி ைம . அஃதாவது எகாந்தமாய்த் தனித்திருக்கும் தகைமை. தவ நெறியில் ஒழுகுவாரது உவகை நிலையம் ஆதலால் தவத்தின் பின் இது வைக்கப்பட்டது. தவமும்தனிமையும்மிகவும் இனிமையாம். 971. மாய வெறியில் மயங்கி யுழல்கின்ற பேயர் தொடர்பு பிடியாமல்-துளய மனமே துணையாய் மருவி யுறையும் தனிமை இனிமை தவம். (க) இ-ள். மாய மோகங்களில் வெறியராய் உழலுகின்ற பேயர் களோடு கூடாமல் தாய மனமே துணையாய் மருவி உறையும் புனிதமான தனிமை இனிமையான தவமாம் என்க. அரிய இனிய தவ வாழ்வு அறிய வந்தது. உலக வாழ்வுகள் பலவகை நிலைகளில் பரவியுள்ளன. மனிதர் ைவ்வளவு தொகையினரோ அவ்வளவு வகையினவாப் வாழ்க்கை கள் வேறுபட்டிருக்கின்றன. வெளியே ஒர் இனமாய்க் கூடி இயங்கிவரினும் உள்ளே பெரிய மாறுபாடுகள் மீறி கிற்கின்றன. எண்ணி வருகிற எண்ணங்கள், பழகி வருகிற பழக்கங் கள், முயன்று வருகிற முயற்சிகள், சேர்ந்து வருகிற சேர்க்கை கள் ஆகிய இவற்றின்படியே மாந்தருடைய வாழ்வுகளும் சூழ்வு களும் மருவி வருகின்றன. புறத்தே பொங்கி கிற்கும் நிலைகளுக் கெல்லாம் மூலகாரணங்கள் அகத்தே நன்கு தங்கி நிற்கின்றன. சி.றமையான கினைவுகளால் மனிதர் சிறியராய்ச் சீரழிந்து போகின்ருர். புனிதமான பெரிய சிந்தனைகள் மனிதரை எவ்வழி யும் இனியராய் உயர்த்தி இன்ப நலங்களை அருளி வருகின்றன. இழிக்க வழிகளிலேயே மக்கள் பெரும்பாலும் பழகி வருக லால் கெளிக்க அறிவை இழக்க யாண்டும் தேசு அழிந்து மாசு கள் படிக்க மங்கி புழல்கின்ருர், துளய நீர்மைகள் கோயாமல் யே பு&லகளிலேயே செருக்கித் திரிதலால் மனித உருவில் மருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/302&oldid=1327263" இலிருந்து மீள்விக்கப்பட்டது