பக்கம்:தரும தீபிகை 7.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2612 த ரும தி பி கை யிருக்தம் மாயப் பேய்கள் என மானிடர் ஈனமடைய நேர்ந்த னர். ஊனஈனங்களே உணராமல் உளம் களித்து உழலுகின்றனர். அருந்தல் பொருங்கல்களில் திருந்திய கியமம் இன்றி நெறி கேடராய் வெறி கொண்டு அலைதலால் அக்கப் பேதைப் பித்தர் களின் வாழ்வு மாயவெறி எனவந்தது. மடமைக்களி மலிந்துளது. வையக மாந்தர் இயல்பாகவே மையலான வாழ்வுகளை யுடையவர். அவற்றுள் மேலும் வெய்ய வெறியராய் விரிந்து போபவர் இழிக்க விலங்குகளாய்க் கழிந்து தொலைகின்றனர். அறிவு நலம் கனிந்து நெறிமுறைகள் த ழு வி வருபவர் விழுமிய மகான்களாப் விளங்கி வியன் ஒளியா மிளிர்கின்றனர். புனிதம் தோய மனிதன் தெய்வம் ஆகிருன்; புன்மை தோயப் புலையா யிழிகிருன். திய புலைகள் ஒருவிய அளவே தாய கிலைகள் பெருகி வருகின்றன; அவ்வரவு ஆனந்தமாகிறது. தீயவர்கள் கொடிய கொத்து நோயினும் கெட்டவர்கள் ஆதலால் நல்லவர்கள் அவரை யாதும் ஒட்டாமல் விலகி விடு கின்றனர். புனித நிலை புலநிலைகளை அஞ்சி அகலுகிறது. தீயாரைக் காண்பதுவும் தீதே என்று ஒளவையார் இவ் வாறு கூறிய கல்ை அந்தப் பார்வையிலேயே பழி துயரங்கள் விளக்கவிடும் என்பது தெரிய வந்தது. கெட்டவர் தொடர்பால் கேடுகள் தொடர்ந்து இழி பழிகள் அடர்ந்து வந்து விடும். When the wicked cometh, then cometh also contempt, and with ignominy reproach. [Bible] கெட்டவன் வரின் இழிவும் பழியும் அவமானங்களும் ஒட்டியே வரும் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. உள்ளம் தாயவர்கள் தீயவரோடு சேராமல் ஒதுங்கியே வாழ்கின்றனர். ஞான ஈலம் கனிந்த பொழுது அது தவ வாழ் வாய்ச் சிறந்து திகழ்கிறது. திகழவே ஈனமான இழி வாழ்வின ரை அறவே அவர் விலகி விடுகின்றனர். தாயகிலை துறவு ஆகிறது. தனித்திரு; பசித்திரு விழித்திரு. என்பன தவ வாழ்வின் புனித நிலைகளாய்ப் பொலிந்து வங் துள்ளன. தனியே இருப்பது மகான்களுடைய வாழ்வாப் மகிமை பெற்றுள்ளது. தனிமுதலே கினைபவர் தனியா ாகின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/303&oldid=1327264" இலிருந்து மீள்விக்கப்பட்டது