பக்கம்:தரும தீபிகை 7.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.18 த ரும தீபிகை காட்சிகளைக் கூர்ந்து நோக்குவோர் முத்திப் பேற்றின் அரு மையையும், பெறுவாரது பெருமையையும் ஒர்ந்த உணர்வர். துறந்தவர் அருந்தவர் எனப் பேர்பெற்று வருபவர் எவ்வ ளவு பெருக்ககவினர் எத்தனே விரதவைாக்கியங்கள் எத்தனை தியாகங்கள் யாவும் உய்த்து உணரவேண்டும். உலக சுகங்கள் எவ்வழியும் புலையானவை; யாண்டும் நீண்ட துயரங்கள் கிறைங் தவை;ஆகவே கிலேயானபேரின்பநிலையை நேரே முயன்றுபெறுக. 974. பொல்லாத கூட்டம் புலேப்படுத்தும் ஆகலினல் ஒல்லுமா றெல்லாம் ஒதுங்கியே-நல்ல மதியோடு கூடி மருவி யுறைக விதியும் விலகும் விரைந்து. (ச) இ-ள். பொல்லாத இனங்களோடு கூடின் புலைகளே விளையும் ஆதலால் இயன்றவரையும் ஒதுங்கி நல்ல அறிவுடன் மருவி வாழுக; அவ்வாறு வாழின் வெவ்விய விதியும் விரைந்து விலகும்; எவ்வழியும் திவ்விய மகிமைகள் விளைந்து வரும் என்க, உண்னும் உணவால் மனிதன் உடலோடு வாழ்க்து வரு கின்ருன்; ஆயினும் எண்னும் எண்ணங்களும் இசைந்துள்ள இனங்களுமே அவனுடைய உயிர் வாழ்வை உருவாக்கி வரு கின்றன. நல்ல எ ண்ணமும் நல்ல இனமும் நலம் பல புரிகின் றன; யே கினைவும் தீய இனமும் இழி பழிகளே விளைத்து அழி துயரங்களையே செய்து யாண்டும் அவலங்களைத் தருகின்றன. நல்லவர்கள் மிகவும் அரியராயுள்ளனர், கெட்டவர்களே எங்கும் பெருகி நிற்கின்றனர். சிறைச்சாலையுள் குற்றவாளிகள் கிறைந்திருக்கல் போல் பரந்த இந்த உலகச் சிறையில் பாவ சிந்தனைகளையுடைய தீயவர்களே செறிந்து விரிந்திருக்கின்றனர். வைய மையல்களில் ஆழ்ந்து வெப்ய புலைகளையே விழைந்து புரிச்து இழிந்து உழலும் மாக்களை இழிவிலங்குகளாகவே கருதி வெறுத்து விலகி மெய்யறிவாளர் தனியே வாழ நேர்கின்றனர். புனிதமானவர் மோனமாய் ஒதுங்கி யுறைகின்றனர். அந்த வாழ்வினர் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/309&oldid=1327270" இலிருந்து மீள்விக்கப்பட்டது