பக்கம்:தரும தீபிகை 7.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த ரிை ைம 2633 உலக வாழ்வு நீர் மேல் குமிழிபோல் கிலையில்லாதது; புலை படிந்தது; அவலத் துயரங்கள் கிறைந்தது என்று அறிந்த பாசபக்கங்கள் யாவும் துறந்த துறவிகள் இறைவனையே கருதி உரிமையோடு உறைக் கிருக்கும்கிலைமையை இது உணர்த்தியுளது கான்றிடு சொன்றி என்றது வெளியே கக்கி வாங் தி எடுத்த சோற்றை. வேண்டாம் என்று வெறுத்துவிட்ட உலக போகங் களை மீண்டு யாண்டும் விரும்பார் என அவரது வைராக்கிய உறுதி நிலைகளே விளக்குதற்கு ஈண்டு இது உவமையாய் வந்தது. சிற்றின்பப் புலைகளை நீங்கினவரே பேரின்ப நிலையினை அடை கின்ருர். பரமானந்தப் பொருளைப் பற்ற சேர்ந்தவர் பழி படிந்த பற்றுக்கள் முற்றும் அற்றவராய் வரமானநெறியில் இருக்கின்ருர். நீத்தார், துறந்தார் என்னும் பெயர்கள் துறவிகளுடைய விலைமை தலைமை நீர்மைகளைத் தெளிவா விளக்கி நிற்கின்றன. அகப்பற்றும் புறப்பற்றும் அற்றவரே பிறப்புகள் முற்றும் அற்றுப் பேரானந்த நிலையை நேரே இனிது பெறுகின்ருர். இருவகைப் பற்று இல் ஒருவனே ஞானி எனப்படின் புறப்பற்றது.ஏனும் ஒருவுதல் இலரும் எவணம் அப் பெயருக்கு உரியர்? வேர் ஒன்றுமில் கொடியும் தரும் இலை மலர்காய் எனின் அகப் பற்றில் தவர்.புறப் பற்றையும் தணவார் மருவினும் அஃது ஒரொருவர் வேரன்மீர் மலர்க்கொடி வாடுருவகையே. (வைராக்கியதீபம் 40) பாசப்பற்றுகள் முற்றும் அற்றவரே துறவி, ஞானி, என் அனும் மகிமையான பெயர்களுக்கு உரியர் ஆகின்ருர். * இருளிலிருந்து நீங்கினவன் ஒளியைக் காண்கிருன். துன்பப் புலேயைக் கடந்தவன் இன்பநிலையை எய்துகிறன். பாசபக்தம் ஒழிந்தவன் ஈசனே அடைகிருன். கண்ணில் காசம் படர்ந்தால் அது எதையும் சரியாக் காணுது; மனத்தில் பாசம் படிந்தால் உண்மையான நிலையை அது உணர முடியாது. மாசு தீர்க்கபோக சான் மனிதன் புனிதனுய் உயர்ந்து பாம புனிகளுன ஈசனே இனிது தெரிந்து இன்பம் உறுகிருன். 330

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/324&oldid=1327285" இலிருந்து மீள்விக்கப்பட்டது