பக்கம்:தரும தீபிகை 7.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2635 அதில் தெளிவான பேரின்பம் விளையும்; இளிவான புன்மை புகாமல் காத்து யாண்டும் நன்மையே.அது கல்கி அருளும் என்க. மவுன நிலையில் மகிமைகள் விளைந்து வருகின்றன. பேசுகின்ற திறம் மனிதனுக்குக் கனி உரிமையாய் அடைக் துள்ளது. மிருகங்கள் பேசா; மனித மரபே பேசவுரிய பெருமை யோடு பெருகி வந்துள்ளது. வாய் மொழிகளை வழங்கியே மனித சமுதாயம் எவ்வழியும் வாழ்க்கைகளை நடத்தி வருகிறது. உலக வாழ்வை இனிது நடத்தி உணர்வின் மணமாப் ஒரிே விசி வருகிற மொழியைப் புனிதமாப் பேணுமல் வீணே பாழ் படுத்துபவர் வெய்ய பேதைகளாப் இழிந்து படுகின்றனர். பயன் இல்லாமல் வறிதே பேசுகின்றவன் அறிவின் சிறுமையை வெளியிடுகின்ருன். வெறுஞ்சொல் விரிய விணன் தெரிகிருன். உள்ளே உணர்வு பெருகி யிருப்பின் வெளியே உரைகள் அருகி வருகின்றன. எவனுடைய வாயிலிருந்து பயன் இல்லாத வார்க்கைகள் அதிக ம ப் விரிகின்றனவோ அவன் ஒரு மதி கேடன் என்பதை அவை தெளிவா வெளியே வார்த்துக் காட்டு கின்றன. பேசும் பேச்சால் மனிதன் எளிதே காணப்படுகிருன். பேச வாப் திறந்தால் பயனுடைய மொழிகளை நயமாப் பேசுக. அவசியம் இல்லாதபோது யாண்டும் பேசலாகாது. கா வடங்கி வந்தால் அதில் கலங்கள் பல நன்கு அடங்கிவருகின்றன. அடங்காத வாப் மடங்காத நோயாப்க் கொடிய துயரங் களை விளேத்து விடும். பேசப் பேசப் பிழை என்பது பழமொழி. இந்த முது மொழியின் குறிப்பைக் கூர்ந்து கோக்கி ஒர்ந்து மதி தெளிய வேண்டும். மோனம் வர ஞானம் வருகிறது. அகமுகமாப் ஆன்ம சிந்தனை செய்யும் ஞானிகள் யாதும் பேசாமல் சித்த சாந்தியாய் அடங்கி யிருக்கின்றனர். உண்மை யான பரமானத்தத்தில் திளைத்துள்ளமையால் உரைகள் அடங்கி விடுகின்றன. உள்ளம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கவே சொல்லும் செயலும் சோர்ந்து தொலைந்து போகின்றன. தேனே சாடிப் பறந்து திரிகிற வண்டு ஒலித்து ஒல மிட்டு ம.மு.ணுகின்றது; அதனைக் க ண் டு உண்ண நேர்ந்தால் ஒலி அடங்கி விடுகிறது. ஆன்ம சுகம் ஆகிய அமுதை அடையாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/326&oldid=1327287" இலிருந்து மீள்விக்கப்பட்டது