பக்கம்:தரும தீபிகை 7.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2636 தரும பிேகை வர் ஆரவாரமாய்ப் பேசிப் பிதற்றிப் பிழையாப் அலைகின்றனர்; அதனை அடைந்தவர் அமைதியாய் ஆனந்த நிலையில் அமர்ந்திருக் கின்றனர். உள்ளம் அடங்கிவர உரைகள் ஒடுங்கி விடுகின்றன. தேனே நாடித் திரிந்துழல் வண்டுகள் வான விதியில் வாய்ஒலி செய்தன; மோனம் கொண்டன. மொண்டதை உண்டன; ஞானம் கொண்டவர் கண்டன மானவே. இந்த உவமையும் பொருளும் ஒர்க்க சிந்திக்கத் தக்கன. அனுபவ ஞானிகளின் இனிய அடையாளமாக மோனம் மருவி யுள்ளது. அங்க உண்மை இங்கே கருதியுணர வந்தது. வான மதியில் வயங்கும் சீதளம் போல் ஞான மதியில் மோ னம் விளங்கியுளது. ஆன்ம அமைதி அதிசய சுகமாகிறது. தியானம், சமாதி என்னும் ஞான சீலங்களில் மோனம் குடி கொண்டு உள்ளமையால் அதன் கிலேமையும் நீர்மையும் எ க் தகையன என்பதை உய்த்து உணர்ந்து கொள்ளலாம் பேச்சு ஒடுங்கினல் அன்றிப்பேரின்ப போகத்தை நேரே பெறமுடியாது. "பேசாத ஆனந்த கிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் வெகு துாரமே:” பேசுகின்ற பேதைக்கும் பேசாத ஆனந்த சமாதிக்கும் வெகு துாரமே என்று தாயுமானவர் இவ்வாறு தமது கிலேமைக்கு இரங்கி மறுகி யிருக்கிருர். மவுன நிலையில் அதிசய சுகங்களை அனுபவித்த மகாதவசி ஆகலால் பேசாத நீர்மையை இங்ங்னம் வியந்து புகழ்ந்துள்ளார். அனுபவ அமைதி அறிய வந்தது. பேசா அனுபூதியை அடியேன் பெற்றுப் பிழைக்கப் பேர் அருளால் தேசோ மயம்தந்து இனி ஒருகால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ? பாசாடவியைக் கடந்த அன்பர் பற்றும் அகண்டப் பரப்பான ஈசா! பொதுவில் நடம் ஆடும் இறைவா! குறையா இன்னமுதே. (தாயுமானவர்) பேசாஅனுபூதியை அளித்து அருளும்படி ஈசனிடம் தாயு மானவர் இங்கனம் வேண்டியுள்ளார். மோன நிலையில் வான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/327&oldid=1327288" இலிருந்து மீள்விக்கப்பட்டது