பக்கம்:தரும தீபிகை 7.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2342 த ரும தீ பி. கை வரும் செருப்பில் விழுந்த புழுப்போல் கெடிது துடித்து அழு தார். தசரதன் அவர்க்கு ஆதரவு பல கூறினன். "ஐயன்மீர்! நான் அயோத்தி வேந்தன்; இனம் தெரியாமல் பிழை நேர்ந்து விட்டது; இன்று முதல் நானே உங்களுக்குப் புதல்வன்; இரதத் தில் வைத்து உங்கள் இருவரையும் என் அரண்மனைக்குக் கொண்டு போகிறேன்; வேண்டிய பணிவிடைகளை விழைந்து செய்வேன்; உளைந்து வருந்த வேண்டாம்; என்னேடு வாருங் கள்' என்று இன்னவாறு கூறி ம ன் ன ன் உரிமையோடு வேண்டினன். அவர் யாதும் இசையாமல் அலமந்து அழுதார். கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர்காதலியா உண்ணு எண்ணி இருந்தால் உலகோர்என் என்றுரையார் விண்ணின் தலைசே ருதும்.யாம் எம்போல் விடலை பிரியப் பண்ணும் பரிமா வுடையாய் அடைவாய் படர்வான் என்ன. (இராமா, நகர்ங்ேகு 88) அந்த இருமுதுகுரவர் கூறியபடியே தசரதன் அடைய நேர்ந்தான். எங்கள் அருமை மகனைப் பிரிந்து நாங்கள் பரிந்து சாவதுபோல் நீயும் சாவாய்! என்று அவர் கொங்து கூறும் போது மன்னனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. பிள்ளை இல்லையே! என்று எங்கி யிருந்தவனுக்கு அவர் வாய்மொழியால் புத்திரர் உண்டாம் என்று தெரிந்து உள்ளம் உவந்திருந்தான். இளமை யில் தான் செய்தவினை முதுமையில் விதியாய் மூண்டு தன்னக் கொல்ல நேர்ந்தது என்று முடிவில் கோசலையிடம் இவன் சொல்லியிருக்கிருன். இராமனைப் பிரித்து தசரதன் இறந்தது ஊழ்வினையால் என்பதை இங்கே நன்கு உணர்ந்து கொள்ளுகி ருேம். விதியின் ஆடல்கள் அதிசயங்களைக் காட்டிவருகின்றன. வினை என்பது வெளியே இருந்து வருவது அன்று, தான் செய்துகொண்டதையே மனிதன் கவருமல் அனுபவிக்கின்ருன். கல்வினைக்கும் தீவினைக்கும் நாயகன் நீ என்றது இன்பமும் துன்பமும் முறையே தருகிற இருவினைகளுக்கும் நீயே தனியுரி மையான கருத்தா என்பது நேரே தெளிவாய்த் தெரிய வந்தது. All are architects of Fate, Working in these walls of Time. (Longfellow) குறித்த ஆயுள் காலத்துள் உழைத்துவருகிற நாம் எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/33&oldid=1326994" இலிருந்து மீள்விக்கப்பட்டது