பக்கம்:தரும தீபிகை 7.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இனிமை 2645 983 தெள்ளிய ஞானத் திருவுடைய ராகயே உள்ளிய சில முடன்ஒழுகின்-ஒள்ளிய இன்பகலம் எல்லாம் எதிர்வருமே எஞ்ஞான்றும் இன்பமே காண்பாய் இனிது. (a-) இ-ள். தெளிந்த ஞானக் திருவுடன் சீலம் தோய்ந்து ஒழுகி வருக; அவ்வாறுவரின் கருதிய சுகங்கள் யாவும் எதிரே பெருகிவரும்; என்றும் இன்ப நிலையமாய் இனிது வாழ்வாய் என்பதாம். " அறிவினல் மனிதப் பிறப்பு சிறப்படைந்து வந்துள்ளது. விலங்கினங்களினும் மனித இனம் உயர்ந்தது என நேர்ந்தது எ கல்ை? எதையும் கூர்க்க பகுத்து நோக்கி ஒர்ந்து உணரும் திறத்தினலேயே மனிதன் யாண்டும்சிறந்து உயர்ந்து நிற்கிருன். உலக நிலைகளையும், கலைகளையும் ஆர ப் ங் த அறிபவர் அறிஞர் என விளங்கி வருகின்ருர். தான் மருவிகின்ற வழிகளி லேயே மனிதன் அறிவாளியாய் வெளியே தெரிய நேர்கிருன். நெறிமுறையோடு சேர்க்க பொழுது கான் அறிவு பெருமை பெறு கிறது; சரியான வழியில் சேரவில்லையானுல் அது பரிதாபமாய் இழிவுறுகிறது. நல்ல நெறியை விட்டு விலகினல் அது புல்லறிவு, புலேயறிவு, பொய்யறிவு எனப் பழிபடுகின்றது. நல்வழி கழுவின் பல்வழிகளிலும் படுகயரங்களே கடிது அடைய வருகின்றன. கனக்கு யாதொரு அல்லலும் நேராமல் எவன் நெறியே ஒழுகி வருகிருனே அவனே நல்ல அறிவுடையவன் ஆகிருன். பின்னே சேர்வதை முன்னதாகக் கூர்மையாய் அ றி ங் த ர்ே மையா கடந்து கொள்பவர் சிறந்த மேதைகளாய் உயர்ந்து வருகிருர். உயிர்க்கு உறுதி புரிவது உயர் அறிவாகிறது. அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அஃதறி கல்லா தவர். (குறள், 427) அறிவுடையவர் யார்? அறிவு இல்லாதவர் எவர்? என்று சரியாகத் தெரிய விரும்புவார்க்குத் தேவர் இவ்வாறு தெளிவா விளக்கி யிருக்கிரு.ர். எதை அறிந்தால் உயிர்துயர் நீங்கி உய்தி பெறமோ அதை உரிமையா அறிவதே ஆவதை அறிவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/336&oldid=1327297" இலிருந்து மீள்விக்கப்பட்டது