பக்கம்:தரும தீபிகை 7.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.50 த ரு ம தி பி கை நிலை இல்லாத பொப் வாழ்வுள் நிலையான மெய்யை உணர்ந்து கொள்வோரே மேலோ ராப் உப்தி பெறுகின்ருர். புலையான புல்லரோடு கூடாதே; உள்ள ம் துளயவரோடு உறவுகொள்; தனியே இருக்க சிக்தனை செய்து பார்; எதையும் தெளிவாக் தெரிக; அது புனிதமான ஞானமாய் இனிமையை விளைக்கும். 984 இன்ப மயமாம் இறையை மருவியுறின் துன்பம் முழுதும் தொலேயுமே-இன்ப நிலையை அறிந்து கினேவில் உயர்ந்து தலைமை யுறுக தனித்து. (+) இ-ள். இன்ப மயமான இறைவனை மருவிவரின் துன்பம் முழு வதும் தொலைந்தபோம்; எவ்வழியும் இன்பமே விளங் த வரும்; அந்த அதிசய ஆனந்த நிலையை விரைந்து பெறுக என்பதாம். அகில சர ாசரங்களுக்கும் தலைமையாய் ஒரு பொருள் நிலவி யுள்ளது. அது ஒன்றுதான் என்.றும் கிலேயானது; கித்திய சத்தியமாப் நிலைத்து யாண்டும் ஆனந்த மயமாப் அமர்ந்திருக் கிறது. சூரியனிடமிருந்து ஒளி பாக்து வருதல்போல் அந்தப் பரஞ்சோதியிடமிருந்தே சகல சிவகோடிகளும் தோன்றியிருக் கின்றன. பிரிந்த போன உயிரினங்கள் மாசுபடிக்கமையால் ஈசனை அடையமுடியாமல் அயலே கடையாப் அலேய நேர்ந்தன. அல்லலும் அவலமும் எல்லையில்லாதனவாய் எங்கும் பொங்கி வர இழிந்து நிற்கின்றன. இழி நிலைகள் பழிவழிகளால் வந்தன. சீவர்கள் அடைகிற துயரங்கள் யாவும் தீவினைகளால் விளைந்தனவே. கிவுைம் சொல்லும் செயலும் நல்ல வழிகளிலே யே பழகி வந்தவர் எல்லா நிலைகளிலும் இன்பங்களை எய்துகின் ருர்; பொல்லாத புலைகளில் பழகினவர் யாண்டும் அல்லல்களையே அடைகின் ருர். வினைகளின் விளைவை ஞானிகள் நன்கு தெரிந்து கொள்ளுகின்றனர்; கொள்ளவே உள்ளம் உரை செயல்களை ஒருங்கே அடக்கி உயர்க்க பேரின்ப நிலையைப் பெறுகின்றனர். உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன் றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/341&oldid=1327302" இலிருந்து மீள்விக்கப்பட்டது