பக்கம்:தரும தீபிகை 7.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2652 த ரும பிே கை தெரிகின்றனர். கெரியவே பொய்யான புலைகளை ஒருவி மெய் யான நிலையில் மேவி நிற்கின்றனர். அந்த கிலேயில் மேலான பேரின் பங்கள் விழைந்து வருகலால் அவர் உவந்து திகழ்கின்ருர் உயிரை விடாமல் பற்றி கின்ற துயர்கள் விட்டு ஒழியவே அது உயர் பரமாப் ஒளி மிகப் பெறுகிறது. தன் உயிர்க்கு நலமா உறுதியைச் செய்து கொள்பவன் உயர்ந்த மகானுய்ச் சிறந்த திகழ்கிருன். அங்கனம் செய்யாதவன் இழிந்த பேதை பாய்க் கழித்து ஒழிகிருன். உணர்வு ஒழிய உயர்வுகள் ஒழிந்தன. மனிதப் பிறவி சிறந்த அறிவால் உயர்ந்து வந்துள்ளது அரிய அந்த அறிவுக்கு உரிய பயனை அடைந்து கொள்ள வேண் டும். எசை அடைந்தால் எல்லாத் துன்பங்களும் ஒருங்கே ஒழிக் தபோமோ அதை அடைவதே அறிவாம். அங்ஙனம் அடையாத ஒழியின் அது கடையாயிழிந்த வறிதேகடிது அழியும். கற்ற தல்ை ஆய பயன் என்? (குறள், 2) அறிவின்ை ஆகுவது உண்டோ? (குறள், 515) கல்வியையும், அறிவையும் நேரே தாக்கி நிறுத்தி உலகத்தை நோக்கி இரண்டு கேள்விகளைத் தேவர் இவ்வாறு கேட்டிருக்கி ருர். மதியுடைய மனிதன் பதில் கூற வேண்டும் என்பது விதி. சிந்தித்து உய்யுமாறு இந்தவாறு விந்தையாப் போதித்துள்ளார். வாலறிவன் ஆன இறைவனைக் கருதி யுருகுவதே கல்விக் குப் பயன்; சீவர்களுக்கு யாதும் இடர் புரியாமல் யாண்டும் இதம் செய்வதே அறிவுக்குப் பயன் என்பதை இவை தெரியச் செய்துள்ளன. நல்ல பயன்களை இழந்த பொழுது கல்வியும், அறிவும்பொல்லாத வழிகளில் புலையாடநேர்ந்து இழிவுறுகின்றன. உள்ளே கபட வஞ்சனைகளை நெஞ்சம் தணிக்து செய்து கொண்டு வெளியே நல்லவர்களைப் போல் நடிக்கின்ற பொல் லாதவர்களை எங்கும் பார்த்து இரங்கி வருந்துகின்ருேம். தங்கள் கல்வியறிவைப் புலையான வழிகளில் செலுத்தித் தலைவர்கள் என்று களித்து வருகிற இவர் தமக்கும் பிறர்க்கும் தொலையாத தொல்லைகளையே விளைத்து வருகின்றனர். கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் ” என்று தாயுமானவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/343&oldid=1327304" இலிருந்து மீள்விக்கப்பட்டது