பக்கம்:தரும தீபிகை 7.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2666 த ரும பிேகை உள்ளம் தூய்மையாய் உயிரை நோக்குபவர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கின்ருர். வெளியே புலன்களில் இழிந்தவர் புலையான பழி வழிகளிலேயே அழுக்தி இழி சுவை களையே நுகர்ந்து அவலராப் அழிந்து ஒழிகின்ருர். பழகி வருகிற இழிபழக்கங்கள் எவ்வழியும் மணிகரைப் பாழாக்கி வருகின்றன புறமே நோக்கிப் பொறி வெறியராப் உழல்பவர் அறிவிலி களாய் அவகேடுகளேயே அடைகின்ருர்; அக நோக்குடையவர் தத்துவ ஞானிகளாய் உயர்ந்து கித்திய சுக சீவிகளாப் கிலவி கிற்கின்ருர். வெளி விழைவால் இழி புலேகளே விளைகின்றன. சகமுகமாய் ஒடிநீ சாகின்ருய் நெஞ்சே! அகமுகமாய் காடின் அமிர்தாம்---யுகமுடிவும் காணுத பேரின்பம் கண்டு களிக்கலாம் வினய் விளியல் விரிந்து. தன் நெஞ்சை நோக்கி ஒரு ஞான யோகி இவ்வாறு கூறி யிருக்கிருர். உலக நாட்டமாய் ஒடி உழல்பவர் உடலை வளர்த்து உயிரை அழிக்கின்ருர்; உணர்வு நாட்டமாய்க் கூடி நிற்பவர் உயிரைப் பரமா உயர்த்தி உப்தி பெறுகின்ருர். இவ்வுண்மையை எண்மையா இதில் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். சிறந்த மனிதப் பிறவியை அடைந்தவன் பிறந்த பயனைப் பெறவில்லையானல் அது பாழான சன்மமாப்ப் பழிபடுகின்றது. உற்ற பிறவிக்கு உரிய பயன் ஒரின் மற்ருேர் பிறவி மருவாமல்-பெற்ற பிறப்பே இறுதியாப் பேரின்பம் காணும் சிறப்பே பெறுக தெளிந்து. மனிதப் பிறவிக்கு உரிய இனிய பயனை இது தெளிவா உணர்த்தியுள்ளது. அருமையான தன் உயிருக்கு உரிமையான இனிமையைச் செய்து கொள்ளாதவன் உலக வ ழ் வி ல் எவ்வளவு பெருமையாப் உயர்த்திருந்தாலும் பேதைப் பித்த குப் இழிந்து பிழைகளே மருவிச் சிறுமையே உறுகிருன். ஒரு பெரிய அரசன், செல்வ வளங்களில் சிறந்து உயர்ந்த சுகபோகங்களே அனுபவித்து வந்தான். கே.க போகங்களையே சுகித்துக் களித்து ஆன்ம கலனை மறத்திருந்த அவன் இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/357&oldid=1327320" இலிருந்து மீள்விக்கப்பட்டது