பக்கம்:தரும தீபிகை 7.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2668 த ரும பிே கை வர். சூரியனும் சந்திரனும் போல் நேரிய நிலையினர். கதிர் ஒளி யால் கண் ஒளி இலங்கி வருதல் போல் பரஞ்சோதியால் சிவ சோதி துலங்கி வருகிறது. எங்கும் பரந்து நிறைந்துள்ள அவனைச் சீவர்கள் அறிந்தும் அறியாமல் மயங்கியுள்ளனர். கண்டவர் கண்டபடி எல்லாம் சொல்லிவர அவன் காட்சி புரிந்து வருகிருன்; உண்டு என்பவர்க்கு உளய்ை ஒளி புரிகிருன்; இல்லை என்பவர்க்கு இலஞப் எளிது மறைகிருன். பரமனுடைய கிலைமையும் தலைமையும் அதிசய விசித்திரங் களுடையன. எவரும் எவ்வழியும் தெளிவாக அறிய முடியாதன. அவரவருடைய கிலேமையின் அளவே அவனது அருளாடல்கள் வெளியாகின்றன. தெளிவான சிந்தை தெய்வ ஒளி ஆகின்றது. கண்டார் கண்ட காட்சியும் நீ! காணுர் காணுக் கள்வனும் நீ! பண்டார் உயிர்நீ யாக்கையும் நீ! பலவாம் சமயப் பகுதியும் நீ! எண்தோள் முக்கட் செம்மேனி எந்தாய்! நினக்கே எவ்வாறு தொண்டாய்ப் பணிவர் அவர்பணி ே குட்டிக் கொள்வது எவ்வாறே? (1) குட்டி எனது என்று இடும் சுமையைச் சுமத்தி எனேயும் சுமையாளாக் கூட்டிப் பிடித்து வினே வழியே கூத்தாட்டினேயே! கினது அருளால் வீட்டைக் கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பனேத்தும் ஏட்டுக் கடங்காசி சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என்சொல்வேன்? (2) (தாயுமானவர்) இறைவனுடைய அம்புக வினேகங்களைத் தாயுமானவர் இவ்வாறு விற்பன விவேகமா விளக்கியிருக்கிரு.ர். உரைகளில் உணர்வு கலன்கள் ஒளி புரிந்துள்ளன. பொருள்களைத் தருவி நோக்குவோர் உயிர் பரங்களின் உறவுகளை துணுகி உணர்ந்து கொள்வர். ஞான மொழிகள் வான ஒளிகளா மிளிர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/359&oldid=1327322" இலிருந்து மீள்விக்கப்பட்டது