பக்கம்:தரும தீபிகை 7.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2671 தேசு மிகுந்துள்ளன. மாசு படியாத மனம் ஈசனுக்கு இனிய இடம் ஆகின்றது; ஆகவே அதன் தனி மகிமை தெரியலாகும். புனித மனம் உடையவரே முனிவர் என நேர்ந்துள்ளனர். கன் உள்ளத்தைத் தாப்மையாப் பேணி வருபவன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி மகிழ்கிருன். சித்த சுத்தியுடைய வன் தத்துவ ஞானியினும் உத்தம முத்தனப் ஒளி மிகுந்து நிற் கின்ருன் உரிய இதயம் இனியது. ஆனல் அரிய இனிமைகள் யாவும் அங்கே உதயம் ஆகின்றன. எல்லா நன்மை களுக்கும் மூலமாயுள்ளமையால் மனநலம் மனிதனுக்கு அதிசய பாக்கிய மாய்த் துதி மிகப்பெற்றது. உயிரின் உயர்வு உள்ளத்திலுள்ளது. Keep thy heart with all diligence; for out of it are the issues of life. . (Bible) உள்ளத்திலிருந்தே உயிர்க்கு உயர் கலங்கள் உளவாகின் றன; ஆதலால் உன் இதயத்தை எவ்வழியும் புனிதமா இனிது பேணுக என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அறிய வுரியது. துன்பம் நீங்கி மனிதின் ய - ண் டு ம் இன்பம் அடைய வேண்டு மால்ை அவனுடைய மனம் பழுது படாமல் எவ்வழி யும் விழுமிய நிலையில் புனிதமா யிருக்க வேண்டும். இதயத்தின் இனிய காப்மையிலிருந்தே ஞானம் உதயமாய் வான சோதி போல் வயங்கி வருகிறது. சீவன் ஆதிபகவனுடைய ஞாதி என் பகை ஞானம் காட்டி யருளுகிறது. அத்தகைய வித்தக விவேக மும் சித்த சுத்தியால் சிறந்து திகழ்தலால் இதன் உத்தம சித்தியை உணர்ந்து கொள்ளலாம். இனிய மனம் இன்பநிலையம் ஆகிறது மந்திரி எனலாம் உண்மை மருவுறும் விசாரத்தாலே; இந்திரி யங்கள் என்னும் இடர்ப்பகை அறுத்த லாலே தந்திரி எனலாம்; இட்டம் சமைத்தலால் ஏவல் ஆளாம்: கொங் திரி கிலாத உள்ளம் நோக்கிய விவேகத் தோர்க்கே. (1) , ஆலிக்கும் இன் பத் தாலே அன்பு அறு மனேவி ஆகும்; பாலிக்கும் இயல்பி ேைல பாவன தந்தை ஆகும்; சிலிக்கும் உறுதி யாலே தேடரு நட்பும் ஆகும்; - ஆாலிக்கும் வினேகள் இல்லாத் தூய்மனம் விவேகத் தோர்க்கே. (ஞானவாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/362&oldid=1327325" இலிருந்து மீள்விக்கப்பட்டது