பக்கம்:தரும தீபிகை 7.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2677 தேவராசனை இந்திரன் ஒரு முறை சாபங்க முனிவர்பால் வந்தான்; அவரது அரிய தவ நிலையை வியந்து புகழ்ந்தான்; தன் னேடு பொன்னுலகத்திற்கு வரும் படி விரும்பி வேண்டினன். அந்த வேண்டு கோளுக்கு அவர் இசைய வில்லை. உனது உல கம் இனிய சுக போகங்களைத் தருவது; ஆயினும் நிலையில்லாதது; ஆதலால் கிலேயான பரமபதமே நான் அடைய வுரியது' என்று நேரே அவர் கூறியருளினர். அன்று அவர் உரைத்த அவ்வுரை கள் ஆழ்ந்த பொருள்களையுடையன. அயலே காண வருகிழுேம். சிறுகாலே யிலா; கிலேயோ திரியா; குறுகா; நெடுகா குணம்வேறு படா; உறுகால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா நெறி எய்துவன் வானுடையாய்! (இராமா, சாபங்கர், 20) வானவர் கோனே நோக்கி மாதவர் இவ்வாறு கூறியுள் ளார். முக்தித் தலத்தைக் குறித்து முத்தர் மொழிந்துள்ள வித் தக மொழிகள் உப்த்து உணரத் தக்கன. பகல் இரவு என்னும் கால நிலைகள் யாகம் இல்லாதது; என்றும் கிலையானது; எவ் வழியும் செவ்வையாய்த் திவ்விய மகிமை யுடையது; கிலம் நீர் முதலிய பூதங்கள் பாவும் அழியினும் யாதொரு அழிவும் நேரா மல் ஈசன் போல் எழில் மிகுந்திருப்பது என மொழி புரிந்துள் ளார். விட்டைக் குறித்து விளக்கி யிருப்பது வியப்பை விளைத்து ளது. இதல்ை அதன் விழுமிய நிலைகளை ஒரளவு யூகித்து உறுதிகலங்களை உரிமையோடு உணர்ந்து கொள்ளுகிருேம். இருவகை வினேகளும் இல்லது; இவ்வழி வருவகை இலாதது; மறுவில் மாதவர் பெருவழி யாசிசெலும் பெயர்வில் குளிகைக்கு ஒருவழி அல்லது இங்கு உரைப்பது இல்லையே. (1) கடையில் எண்குணத்தது; காமராகர்கள் இடைகனி இலாதது; இல் இயற்கை இல்லது; மிடையொடு விழைவு வேர் அறுத்த வீரர்கள் அடைவது ஒர்கிலே பிறர்க்கு அறியலாகுமோ? (2) மணிமலர்ந்து உமிழ்ஒளி வனப்பும், சந்தனத் துணிமலர்ந்து உமிழ்தரும் தண்மைத் தோற்றமும், கணிமலர் நாற்றமும், என்ன அன்னதால் அணிவரு சிவகதி யாவது இன்பமே. (சூளாமணி, முத்திச்சருக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/368&oldid=1327331" இலிருந்து மீள்விக்கப்பட்டது