பக்கம்:தரும தீபிகை 7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2346 த ரும பிே கை 894. தினையளவே ஆலுைம் செய்தவினை முற்றிப் பனேயளவு துன்பம் பயக்கும்-வினேவிளேவில் அந்தோஎன் றேங்கி அலமருவார் அம்முளையை முந்தோவச் செய்யார் முனைந்து. (+) இ-ள். செப்த தீவினை தினை அளவு ஆலுைம் அது பனை அளவு து.ை பங்களை விளக்கும்; அந்த அல்லல்கள் மூண்ட பொழுது அந்தோ என்று எங்கி அழுகின்றனர்; துன்ப மூலத்தின் முளையை முன்ன தாகக் களேயாமல் பின்னர் இன்னல் உறுவது இழிமடமையாம்; மதிகேடான மடமையே விதியாய் அடர்கிறது என்பதாம். வினையின் விளைவைத் தெளிவா விளக்குதற்குத் தினையும் பனையும் அளவாய் வந்தன. தினை அரிசி உருவில் சிறியது; பனை மரம் மிகவும் பெரியது; சின்ன ஒரு தீமையை நீ செய்தாலும் பின்னர் அது கொடிய நெடிய இன்னலை விளைத்து விடும் என் பதை உன்னி உணர இவை ஈண்டு உவமைகளா நேர்ந்தன. தினை உணவுப் பொருள்; தின்ன உரியது; எவரும் விரும்பி உண்பது; வினையையும் அவ்வாறே மக்கள் விரும்பிக் கொள்வர் என்பது ஈண்டு நுண்மையா உணர வந்தது. மடமையான பழக்கத்தால் தீமையைச் சிறிது செய்தாலும் பின்பு கொடுமையான பெரிய துயரங்களை அடைய நேர்கின் றனர். விளேகின்ற அல்லல் தெரியாமல் அவலமாயுழல்கின்றனர். அலமரல் = நிலை குலைந்து வருக்துதல் தீமையைச் செப்து விட்டுப் பின்பு அதன் விளைவுகளான துன்பங்களை அனுபவிக்க சேர்ந்த போது நெஞ்சம் கலங்கி கெடிது வருக்தி அழுது புலம்பு வது மனிதரிடம் கொடிய மடமையாய் நெடிது மருவியுள்ளது. மறத்துறை நீங்குமின் வல்வினே யூட்டும்என்று அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி காக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும் யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்; தீதுடை வெவ்வினே உருத்த காலப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர். (சிலப்பதிகாரம், 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/37&oldid=1326998" இலிருந்து மீள்விக்கப்பட்டது