பக்கம்:தரும தீபிகை 7.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வீ டு 2681 வீட்டை விழைந்து விழுமியராய் மேலான் தேட்டை அடைந்தார் தெளிந்து பொப்பான புலையை அறிபவர் மெய்யான கிலையை அடை கின்ருர். துன்பத் தொடர்பு ஒழிய வழிகானும் அளவு இன்ப ஒளிகள் நேரே வெளியாகின்றன. ஒட்டை உடம்பின் நிலைகளை யும் உலகப் புலேகளையும் உணர நேர்ந்தவரே வீட்டை அடைய விரும்பித் தான கருமங்களைச் செய்கின் ருர்; தவங்கள் புரிகின் ருர்: துறவி களாய்க் காட்டை யடைந்து கதிாலம் காணுகின்ரு:ர். இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்என் றிராதே--,இடுங்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழின் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் விடு. (நல்வழி, 3) உடம்பின் கிலையை எடுத்துக் காட்டி உயிர்க்கு உப்தி கா ஆணும் படி ஒளவையார் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். புலையான துன்புங்கள் நிலையாய் நிறைந்திருக்கும் நெடிய மூட்டை என் பார் இடும்பைக்கு இடும் பை என்ருர். அல்லலான இந்தப்பையை மெய் என்று நம்பி அவலமாய் அழிந்து போகாமல் காலம் உள்ள பொழுதே மேலான விட்டுக்கு உரிய தருமசீலங்கண் உரிமையா அடைந்து கொள்ளுங்கள் என உறுதியா அறிவுறுத்தி யுள்ளார். விண்டாரைக் கொண்டாடும் வீடு என்றது பற்று விட்ட வர்க்கும் வீட்டுக்கும் உள்ள ஒற்றுமையான உறவுரிமையை உணர்த்தி நின்றது. பித்த மயக்காப்ப் பற்றியுள்ள பாச பந்தங் களை விட்டு ஒழியுங்கள்; பேரின்ப வீடு உங்களுக்கு வாசமாப் வரும் என வரவு நிலையை உறவாத் தெளிய விளக்கினர். எல்லாப் படியாலும் எண்ணில்ை இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை--கல்லார் அறிந்திருப்பார் ஆதலினல் ஆங்கமல ர்ேபோல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. (நல்வழி, 7) உயிர்க்கு கிலையமாய் சேர்ந்துள்ள உடலின் புலையை ஒர்ந்த வர் உலக பக்கங்களை ஒருவி உ ய ர் க தி கானுவர் என இது உணர்த்தியுள்ளது. பொய்யான மாய மையல்களை நீங்கினவரே மெய்யான தாய முத்தியை நேயமாய்த் தோய நேர்கின்ருர், 336

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/372&oldid=1327335" இலிருந்து மீள்விக்கப்பட்டது