பக்கம்:தரும தீபிகை 7.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2683 பொழுது தான் துயரங்கள் எல்லாம் நீங்கி உயர் வான பேரின் பம் ஓங்கிவரும்; உரிமையை உணர்ந்துபெறுவதே பெருமையாம்; இந்த உண்மையை ஊன்றி உணர்ந்து உப்தி பெறுக என்பதாம். உயிர் துயர் தீர்ந்து உயர் பேரின்பம் அடையும் வழியை இது விழி தெரிய விளக்கியுள்ளது. முதல் என்றது. பரம்பொருளை. எல்லா வற்றிற்கும் மூல முதல் ஆதலால் அந்தக் கோலமும் சில மும் தெரிய வங்தது. முழு முதல் பரமனை நழுவியதிலிருந்தே كلاعـ துயரங்கள் அடர்ந்து படர்ந்து தொடர்ந்து வர நேர்ந்தன. இன்ப முதலை இழக்க நாள் முதல் துன்பங்கள் சூழ்ந்து கொண்டன. விட்ட என்ற த அரிய இனிய பெரிய திருவை இழந்து பிறவிக்கடலில் விழுந்து பெருந் துயரங்களில் அழுந்தி இழிந்து உழலுகிற இழிவு கிலைகளை எல்லாம் எண்ணியுணர வந்தது. இழ வை உணராமல் இழிவுறுவது ஈன மருளாய்ப் பெருகியுளது. ஈசன் எவ்வழியும் எல்லை காண முடியாத பேரின்பக்கடல். அமுத மயமான அக்க ஆனந்த சாகரத்தைப் பிரிந்து வந்த கனலே தான் பல வகையான உடல்களை எடுத்தப் பிறவித் துயரங் களைச் சீவன் அடைய நேர்ந்தது. பிழையாப்ப் பிரிந்து வந்த கிலையைத் தெரிந்து விரைந்து அதனை அடைந்து கொண்டால் அன்றி அல்லல்கள் பாதும் பாண்டும் நீங்கா. ஈசனைப் பிரியவே நீசப்பிறவிகள் கெடிதுதொடர்ந்தன; நாசத் தயர்கள் படர்ந்தன. நேரான வழியை விட்டு விலகினவன் மாருன காட்டில் புகுந்து திசை தெரியாமல் மருண்டு அலைந்து மறுகுவது போல் மேலான பரமனை விட்டு விலகின சீவன் கீழான பிறவிக் காட் டில் இழிந்து எவ்வழியும் புலேயாப் அலமந்து உழலுகின்ருன். தன் கைப்பொருளே வைத்த இடத்தை ஒருவன் மறந்து போனன்; அது அரிய விலையுடைய பெரிய வயிரமணி, உயிர்க்கு உயிரான அதனைக் காணுமையால் துயரோடு பாண்டும் எங்கி அலேந்தான்; ஆண்டுகள் பல கழிக்கன; எங்கும் அகப்படவில்லை; அல்லலோடு வருக்கி வந்த அவனுக்கு முன்பு புதைத்து வைத்த இடம் சிறிது நினைவுக்கு வந்தது; வரவே விரைந்த ஒடினன்; நேரே தோண்டினன்; மணியைக் கண்டான், பேரானந்தம் கொண்டான். அவ்வாறே பரம் பொருளை இழந்த சிவன் பிரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/374&oldid=1327337" இலிருந்து மீள்விக்கப்பட்டது