பக்கம்:தரும தீபிகை 7.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2687 இவை காட்டியிருக்கும் கதி நிலைகளைக் கருதி யுனருக. அரிய ஞானக் காட்சிகள் எளிதே தெரிய வந்துள்ளன. தத்வ மஸி என்பது வேத மந்திரம். அக்கப் பரம் பொருள் நீயே என் பது இதன் பொருள். மாய மருளால் மறக் தள்ள பரம்பொரு ளேத் தாய தெருள் ஒளியால் தெளிந்து கொள்ள வேண்டும். விட்ட முதலே விடாமல் போய்த் தொட்டுக் கொள்; உன்னை ஒட்டியிருந்த துயரங்கள் யாவும் அடியோடு ஒழிந்து போம். பேரின்ப விட்டில் குடி புகுந்து பெருமகிமையாப் விளங்குவிாப். 995. எடுத்த பிறவிக் கினியபயன் என்றும் அடுத்த பிறவி அடையாது-உடுத்த உடம்பு விழுமுன் உறுதி கலனே அடைந்து மகிழ்தல் அறிவு. (டு) இ-ள். இப்பொழுது எடுத்து வந்துள்ள இந்தப் பிறவிக்கு உரிய இனிய பயன் இனிமேல் எப்பொழுதும் அடுத்த பிறவி அடை யாமல் செப்த கொள்வதேயாம்: ஆகவே உற்ற உடம்பு பின மாப் விழுமுன்னரே உறுதி சலன விரைந்து அடைந்து கொள்க; அவ்வாறு பெறுவதே அ.த பெற்ற அறிவின் பெரியபேரும் என்க. புழு பூச்சி முதலிய இழிவான பிறவிகளை எல்லாம் கடந்து உயர்வான மனித உருவை மருவி வருவது அரிய பெரிய பாக்கி யமாம். அரும் பெறல் யாக்கை என்று மானிட தேகத்தை மே லோர் வியந்து புகழ்த் துள்ளனர். பெரும் புண்ணியப் பேற்ருல் கிடைத்துள்ள இப்பிறவியைக் கொண்டு உயிர்க்கு உறுதியைச் செப்து கொள்ளுபவர் உயர்ந்த உத்தம முத்கர் ஆகின்ருர். அல்லல் யாதும் அணுகலாகாது என்று மனிதன் பாண்டும் அஞ்சுகின்ருன்; நல்ல சுகங்கள் வேண்டும் என்றே எவ்வழியும் அவாவி அலைகின்ருன். இயல்பான இந்த அனுபவங்களால் உயிர் துயர்களை வெறுக்கின்றது; உயர்வான இன்பங்களையே உவந்து கொள்ளுகின்றது என்னும் உண்மையை உணர்ந்து கொள்கி ருேம் அனுபவ கிலே அதிசய ஞானமாய் இனிது மிளிர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/378&oldid=1327341" இலிருந்து மீள்விக்கப்பட்டது