பக்கம்:தரும தீபிகை 7.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100, ഖ് എ 2689 ஈசனே நாடி மாணிக்கவாசகர் உருகியுள்ள நிலைகளை இவ் வுரைகளால் உணர்ந்து கொள்கிருேம். உயிர்க்கு நலமாத் துணை புரியவில்லையே என்று உள்ள க்கை எள்ளி இகழ்ந்திருக்கிரு.ர். பின நெஞ்சே! என்றது இறைவனையே எண்ணி உருகாமல் உலகப் புலைகளில் போகின்ருயே என அப்போக்கை நோக்கி வந்தது. சிவனை நாடுவதே சீவனுள்ள நெஞ்சம். தேடு கின்றனே ஐம்பொறி களுக்கிரை தேடியும் கிடையாமல், வாடு கின்றனே வீடுசென்று என்றினி மருவுவை மடநெஞ்சே! ஆடு கின்றிலே அழுகிலே தொழுகிலே அரங்கனேக் காம்கூப்பிப் பாடு கின்றிலே கினேகிலே பதின்மர்தம் பாடலின் படியாயே. (திருவரங்கக்கலம்பகம் 55) மடநெஞ்சே! பொறிகளுக்கு இரை தேடுகின்றன; இறை வனே நாடுகின்றிலை, வீடு உனக்கு எப்படிக் கிடைக்கும்? என்று மணவாளதாசர் இப்படி மனக்கோடு சினந்து மறுகியிருக்கிரு.ர். பொறி கசைகளில் ஓடாமல் ப ம ன நாடுகின்றவரே பேரின்ப வீடு கூடுகின்றனர்; அந்த அதிசய ஆனந்த நிலையை அடைய நேர்க்கவர் வேறு எதையும் நாடாமல் ஈசனையே நாடி எவ்வழியும் உரிமையோடு துதிசெய்து வருகின்றனர். பிறவியை நீக்கத் துணிந்து துறவு நிலையை அடைந்தவர் பிறவாத பெரியோனையே உறவாக் கருதி அன்பு:கணிந்து உள்ளம் உருகி உரையாடி வருவது அவரது பரிபாக நிலையை உலகம் அறியச் செய்கிறது. சித்த சுத்தர் முக்கர் ஆகின்ருர். எடுத்த பிறவியே இறுதியாப் அடுக்க பிறவியை அடையாத சீவன் முத்தர்க்கே ஆனந்த வீடு தனி உரிமை ஆகின்றது. 996. ஆதியும் அந்தமும் இல்லாத அப்பரத்தின் சோதிச் சுடராய்த் தொடர்ந்திருந்தாய்-மோதிஎழு மாயப் பிணிப்பால் மயங்கி இழிந்துள்ளாய் துாயய்ைத் தோய்க தொடர்ந்து. (சு) இ-ன. மூலமும் நடுவும் முடிவும் இல்லாத முழுமுகல் சோதியின் விழுமிய துளியாய் நீ ஒளி மிகுந்திருந்தாய்; அதிலிருந்து எப்படி 337

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/380&oldid=1327343" இலிருந்து மீள்விக்கப்பட்டது