பக்கம்:தரும தீபிகை 7.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2691 என்னுடைய உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாய் கன்னல்முக் கனிதேன் கண்டு அமிர்து என்னக் கலந்தெனே மேவிடக் கருணை மன்னிய உறவே உன்னேநான் பிரியா வண்ணம்என் மனம் எனும் கருவி தன்னது வழி அற்று என்னுழைக் கிடப்பத் தண்ணருள் வரமது வேண்டும். (தாயுமானவர்). இறைவனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு முறை யிட்டிருக்கிருர். உள்ளப் பரிவு உரைகளில் தெரிகிறது. உன்னை நான் பிரியா வண்ணம் வரம் அருளவேண்டும் என்று வேண்டியிருத்தலால் ஆண்டவனிடம் இவர் பூண்டுள்ள அன்புரி மையை ஈண்டு நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். சிங்தை அடங் கித் தத்துவ லேசாய்ச் சித்த சாக்தியை அடைந்திருக்கின்ருர். தத்துவ நிலையில் இம் மெய்த்தவர் உள்ளம் உயர்ந்துள்ள நிலையை உரைகள் தெளிவா உணர்த்தி கிற்கின்றன. புனிதமான தவயோகி ஆதலால் சிவானந்த போகக்கை அனுபவித்துள்ளார். அவ் வுண்மை மொழிகள் தோறும் வெளியாயப் வருகின்றது. அத்தன், கித்தன், சுத்தன், முத்தன் என ஈசனுக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சகல சீவகோடிகளுக்கும் தந்தையா யுள்ளவன், என்றும் கிலேயாயிருப்பவன், இயல்பாக வே தாய்மை யுடையவன், பற்றுக்கள் பாதும் இல்லாதவன் என்னும் நீர்மைகளை இப்பேர்கள் சீர்மையா விளக்கியுள்ளன. தலைமை நிலைமை தகைமை தன்மைகள் நேரே தெரிய வந்தன. இத்தகைய முழுமுதல் பரமனே உழுவலன்போடு கிழமை யாக் கருதி வருபவர் அவனது பழமையான பான்மையை வளமையாய் மருவி அதிசய மகிமைகள் பெருகிஉயர்கின்றனர். கித்தியப் பொருளை நினைந்து வருகிற தத்துவ ஞானிகள் நித்திய முக்கராப் நிலவி நிற்கின்றனர். பாசபக்கங்கள் ஒழிக்க வுடனே மனிதன் மகானப் மகிமை கோய்ந்து எவ்வழியும் தெய்விகம் வாய்ந்து ஈசனேடு தேசு மிகுந்து திகழ்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/382&oldid=1327345" இலிருந்து மீள்விக்கப்பட்டது