பக்கம்:தரும தீபிகை 7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2348 தரும தீ பிகை விஞ்சையன் வாளால் விட்டிய தன்றே ஆங்கறிந் தனேயோ சங்கிது எேனின் பூங்கொடி கல்லாய் புகுந்தது இது." (மணிமேகலை, 23) மகனை இழந்து மறுகி அழுத அரசிக்கு இவ்வாறு அறிவு கூறியிருக்கிருள். சமையலாளைக் கொன்ற வல்வினை முதலில் அரவால் உயிர் வாங்கியது; பின்பு விஞ்சையன் வாளால் வெட்டி வீழ்த்தியது என விளக்கியிருக்கும் வித் த கம் உய்த்துணரத் தக்கது. தன்னைச் செய்தவனே எவ்வழியும் தொடர்ந்து வினை கொல்லும் என்பதை இங்கே நன்கு தெளிந்து கொள்ளுகிருேம். அசோதரன் என்பவன் பவனமாதேவன் என்னும் அரசனு டைய அருமை மகன். இனிய குணநீர்மைகளுடையவன். ஒரு நாள் தனது அழகிய மனைவியோடு பொழிலிடையிருக்த பொய் கையில் நீராடினன்; அப்பொழுது அங்கே காமரைச் செறிவுள் ஒரு அன்னக்குஞ்சைக் கண்டான். அதன் அழகு கண்ணேக் கவர்ந்தது; மனைவியும் பிரியமா விரும்பினுள்; விரும்பவே அகன எடுத்து வந்து அரண்மனையில் வைத்து அருமையா வளர்த்தான்; பொன்வள்ளத்தில் பால் ஊட்டி நாளும் நன்கு பேணி வந்தான்; ஒரு நாள் தங்தை கண்டான்; சிங்தை கவன்ருன்: 'ஆ! இக்க இளங்குஞ்சைப் பிரிந்து தாய் வருந்துமே! யார் இது செய்தது? என்று அருகே நின்றவரை வினவினன். இளவரசு” என்றனர். உடனே தனது இருக்கைக்கு வந்து மகனை வரவழைத்தான்; குமரன் வந்து வணங்கி நின்ருன். அவனே அருகே இருக்கி, நீ அன்னப்பார்ப்பைப் பிடித்து வந்திருப்பது என் உள்ளத்தை வருத்துகிறது; அது தாயைப் பிரிக்கு வருக்கியுள்ளது போல் நீயும் பெற்ருேரைப் பிரிந்து சிறைப்பட்டு வருக்க நேரும்ே! வினை மிகவும் கொடியது; தன்னைச் செய்தவனேக் கவருமல் அது இன்னல் செய்து விடுமே” என மன்னன் மிகவும் மறுகினன். பூவைகிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா யாவை அவை தம்கிளேயின் நீங்கியழ வாங்கிக் காவல்செய்து வைத்தவர்கள் தங்கிளேயின் நீங்கிப் போவர்புகழ் நம்பி! இது பொற்பி லது கண்டாய்! (சீவகசிந்தாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/39&oldid=1327000" இலிருந்து மீள்விக்கப்பட்டது