பக்கம்:தரும தீபிகை 7.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2705 அரிய சாதனம் அமைந்துள்ள பொழுதே பெரிய ஊதியத் தைப் பெருது கின்றவர் பேதைகளாய் இழிந்து போகின்ருர்; பெற்றவர் மேதைகளாப் விளங்கி கிற்கின்ருர், மெய்யுணர்வு என்பது பொய்யிழிவுகளை நீக்கி மெய்யான இன்ப நிலையை எய்துவதே யாம். பெறவுரியதைப் பெறுபவன் பேருளனாகிருன். ஈனமும் இடர்களும் இகந்து தன் உயிர்க்கு ஆனதை அறிவதே ஆன்ம ஞானமாம். தத்துவ ஞானத்தின் உத்தம உருவத்தை இது உணர்த்தி யுள்ளது. உள்ளதை உள்ளபடி ஒர்ந்து தெளிவதே தெள்ளிய ஞானம். என்றும் உள்ள ஈசனை எய்தி இன்புறுக பிறவி எவ்வழியும் துன்பம் என்பது அனுபவங்களால் செவ்வையாய்த் தெரிய வருகிறது. அல்லல்களே யாண்டும் நீண்டு தொடர்ந்து கெடிது படர்ந்து வருதலால் துயரப் பிறப்பு என்று பெயர் பெற்று அதன் இயல்பை விளக்கி நின்றது. .பற்றிய துன்பங்கள் எல்லாம் ஒருங்கே நீங்கி என்றும் அழியாக இன்ப நிலையைப் பெறுவதே முத்தி, வீடு என முடிவா யுள்ளது. பங்கசீக்கங்களை இங்த மொழிகள்தெளிவாக்கியுள்ளன: துன்பம் தோற்றம்; பற்றே காரணம். o இன்பம் வீடே பற்றிலி காரணம் (மணிமேகலை, 30) நான்கு உண்மைகளை இது நன்கு காட்டியுள்ளது. பிறப் பைத் தோற்றம் என்றது தோன்றி மறையும் மருமம் தெரிய. தோற்றம் அன்பம்; அதற்குக் காரணம் பற்றே. வீடு இன்பம்; அதற்குக் காரணம் பற்று இன்மையே. என விளக்கியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும் தக்கம், துக்க விளைவு, துக்க நீக்கம், தக்கம் நீங்கும் நெறி என்னும் இந்த கான்கையும் சத்திய சதுட்டயம் என்பர். இக்க கிலைகளை உய்த்து உணர்ந்து உய்தி காண்போரே உத்தம ஞானிகள் ஆகின்ருர். அறிவதை அறிந்த அடைவதை அடைக. இடும்பைகளே கிறைந்துள்ளமையால் உடம்போடு கூடி வாழும் உலக வாழ்வை வெறுத்த ஞானிகள் உய்தி கான கேர்ந்தனர். உண்மை கண்ட வர் நன்மை கானுகின்ருர். - இன்னது அம்ம இவ்வுலகம் இனிய காண்கிதன் இயல்புணர்ங் தோரே. (புறம், 194) 889

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/396&oldid=1327359" இலிருந்து மீள்விக்கப்பட்டது