பக்கம்:தரும தீபிகை 7.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2353 வினையின்படி விளைவே அன்றி நினைவின்படி எவனும் அனு போகங்களை அடைவதில்லை. முன்னம் செய்த கருமங்களின் பலன்களையே மருமங்களா மானுடங்கள் மருவி வருகின்றன. கொடிய தீவினைகளைச் செய்தவன் துயரங்களை நுகர்ந்து துடித்து அயர்கின்ருன்; இனிய கல்வினைகளை இழைத்தவன் இன்ப கலங்களைச் சகித்து எவ்வழியும் களித்து வருகின்ருன். பொல்லாத தீமைகளைச் செய்தவன் நல்ல சுகபோகங்களை விரும்புவது எட்டி விதையை கட்டினவன் இனிய மாங்கனி யைத் தின்ன விழைவதுபோல் இன்னலான மட்டித்தனமே யாம். கொள்ளி கொண்டு தலை சொரிந்து பிள்ளை அழும் பேதை மைபோல் உள்ளி உணராமல் தீமையைச் செய்து கொண்டு துயரங்களில் அழுந்தி மனிதர் மறுகி அழுது மடிந்த போகின் முர். மையல் நோக்கும், மாயப் போக்கும், மடமையும் வைய மாந்தரை நையப் புடைத்து நாளும் வதைத்து வருகின்றன. தீய வழியில் ஒருவன் ஒருமுறை பழகினல் பின்பு அவன் நல்ல வழியில் வருவது அரிது; அந்த இழி பழக்கத்தால் அழி துயரங்களையே அவன் அடைய நேர்கின்ருன். வினேவிளைவை உணராமல் வீணே விதியை நோவது மதிகேடாப் மருவியது. செய்தவினை எ ப்த கணைபோல் குறிதவருமல் பாப்கின்றது. அடுசிலை என்றது கொல்லும் தொழிலுடைய வில் என அதன் கோலம் தெரிய வந்தது. அல்லல் விளைவுகள் அச் சொல்லில் விளங்கி கின்றன. தீவினை தீய துயரங்களேயே செய்கிறது. எவரையும் வினை விடாமல் அடுதலால் அது அதிசய விதி யாய்த் துதி செய்ய நின்றது. மணிமுடி துறந்து இராமன் கானகம் போனதும், அகில வுலகங்களையும் அடலாண்மை யோடு ஆண்ட இராவணன் அவலமாய் மாண்டதும் விதியின் விளைவுகளே. அது ஆட்டியபடியே யாவரும் ஆடி வருகின்றனர். இளமையில் இராமன் உல்லாசமாய்க் கூனியின் முதுகில் ஒரு வில் உண்டையை விசினன். اقتد اٹھے۔ அவளுக்கு வேதனை ஆயது; அந்தச் சிறிய தீவினையால் தனது பெரிய அரசை இழந்து இந்த இனிய கோமகன் கொடிய காட்டுக்குப் போக நேர்ந்தான். வினையின் பலன்கள் விசித்திரங்களாய் விரிகின்றன. 295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/44&oldid=1327005" இலிருந்து மீள்விக்கப்பட்டது