பக்கம்:தரும தீபிகை 7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2356 த ரு ம தி பி கை லாம் உடையராப் பாண்டும் உயர்வுறுகின்றனர். பொருளை ஈட்டவும், காக்கவும், நல்ல வழிகளில் செ ல வு செய்யவும், சுக போகங்களை நயமா அனுபவிக்கவும் அறிவு வல்லது; அத்தகைய அறிவை உரிமையாக உடையவர் பொருள் இன்றி வறியராய் மறுகுகின்றனர்.இன்மையும் உடைமையும்புன்மையுறுகின்றன. நல்ல அறிவு சிறிதும் இலராய்ப் பொல்லாத புலைகளில் இழிந்துள்ள பலர் செல்வ வளம் எய்திச் செழித்துக் கொழுக் துத் திரிகின்ருர். மாறுபாடான இந்த விபரீத நிலைகளை உலகத்தில் கண்டு வருகிருேம்; இதற்குக் காரணம் என்ன? கருதி உணர்ந் தால் உறுதியான உண்மைகள் நேரே தெரிய சேருகின்றன. பொருளுக்கு எவ்வழியும் தனியுரிமையாளர் வறியராய் எங்கவும், அந்த உரிமை பாதும் இல்லாத புல்லர் செல்வராய் ஒங்கவும் சேர்க் தள்ள பாங்குகளை நூலோரும் மேலோரும் யாங்கனும் ஆய்ந்த ஒய்ந்து முடிவில் விதியே என்று தேர்ந் துள்ளனர். வினையின் அளவே மனித வாழ்வு மருவி வருகிறது. குசேலர் தெளிக்க அறிவாளி; சிறந்த குணசாவி; அருள் கலம் கனிந்து நல்லவராயிருந்த அவர் பொருள் இல்லாமையால் அல்லல் பல அடைந்தார். வறுமையால் வாடி மனைவி மறுகிய போதெல்லாம் அவள் உள்ளம் தேற உறுதிகள் பல கூறிஞர். அலாவன் தீட்டிவைத்த ஆயுளின் அளவை காறும் விலகிலா வினேக்குத் தக்க விருப்புணு வெறுப்புணுவும் இலகவுண்டு; இன்றேல் இன்ரும் இன்னுயிர் உடம்பின்வாழ்தல்; மலர்தலே உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர். வினையின் அளவே பொருளும் போகமும் உளவாம்; இல்லா மையை நினைக்து நீ வருக்கலாகாது என்று மனைவிக்கு இவ்வாறு அவர் புத்திபோதித்திருக்கிரு.ர். நல்ல சீலமுடைய அவர் பொல் லாக வறுமையால் அல்லலுழங்கிருந்தது, பழவினைவலியை விழி தெரிய விளக்கி விதியின் அதிசய நிலையைத் துலக்கி கின்றது. இம்மை மறுமை இருமையும் நன்கறிந்த செம்மை யுளமுடைய சிலர்கள்-வெம்மைதரு பொல்லா வறுமையுறப் புல்லர் வளமுறுதல் எல்லாம் விதியின் இயல். - விதியின் விசித்திரச் செயலை இது இனிது விளக்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/47&oldid=1327008" இலிருந்து மீள்விக்கப்பட்டது