பக்கம்:தரும தீபிகை 7.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 2315 யை மனிதன் விழிதிறந்து விரைந்து காண வேண்டும் என்பதை மேலோர்யாவரும் ஒளி மிகுந்த மொழிகளால் உணர்த்தியுளார். பிறந்தவர் எவரும் இறந்து போவர்; சாவை யாரும் நீக்க முடியாது; ஆயினும் இந்த யாக்கை முடிவை ஆக்கமா அமைத் துக் கொள்ள வேண்டும். பொன்றும் உடலைப் பொருந்தி வந்த வர் புண்ணிய கீர்மை மருவிகின்ருல் என்றும் இனியராய் அவர் கின்று திகழ்வர். தேவரும் அவரை உவந்து உரிமை செய்து கொள்ளுவர்.ஆதலால் விண்னேர் விருந்தினர் என நேர்ந்தார். தரும நீதியோடு வாழ்ந்து வருபவர் இருமையும் பெருமை புறுகின்ருர். அவருடைய வாழ்வு மனித சமுதாயத்துக்கு இனிய ஒரு புனித போதனையாய் மருவி வருகிறது Live righteously; you shall die righteously. [Ovid.]

t ரீதியாய் வாழ்; உன் சாவு நீதியாய் வரும்' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது.

பிறப்பின் பயனைப் பெற்றுக் கொண்டவர் இறப்பில் இன் புறுகின்றனர். புண்ணியம் பொங்கி வர வாழ்வதே புனித வாழ்வாம். அவ்வண்ணம் வாழ்பவனே வானவன் ஆகிருன். 883. கற்ற கலையைக் கடமை யொடுபேணி உற்றதன் வாழ்வை ஒளிசெய்து-சுற்றம் தொழுது மகிழத் தொழில்புரிந்து வாழின் பொழுது விளையும் புகழ். (க.) இ-ள். தான் கற்ற கல்வியறிவை நல்ல கருமங்களைச் செய்வதால் ான்கு பேணித் தனது வாழ்வை விழுமிய நிலையில் ஒளிசெய்து உயர்த்தித் தன்னைச் குழ்க்க உறவினங்கள் உவந்து மகிழ உதவி புரிந்துவரின் அவன் புகழ் மிகவும் விரிக்க விளங்கும் என்பதாம். இயல்பாகவே மனிதன் அறிவுடையவன்; ஆயினும் கல்வி யால் அது தெளிவாய் ஒளிபெற்று வருகிறது. சிறந்த அறிவாளி களின் கருத்தக்களை நூல்களின் வழியாக நுனித்து அறிக்க கொள்வதையே கல்வி என்று உலகம் சொல்லி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/6&oldid=1326966" இலிருந்து மீள்விக்கப்பட்டது