பக்கம்:தரும தீபிகை 7.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2376 த ரு ம தி பி ைக விநய விநோகங்களும் விரவி மிளிர்கின்றன. கருதி யுனரும் அளவு கலையின் சுவைகள் தலைமையாய்க் கனிந்து வருகின்றன. உயர்வான உணர்வுடைய பிறவிக்கு உறுதியான பயன் அயலே ஒரு பிறவியை மருவாமல் அந்தமில்லாத அதிசய நிலை யை அடைந்து கொள்வதேயாம் என்பது ஈண்டு உணர்ந்து கொள்ள வந்தது. மீண்டும் பிறவாதபடி வேண்டி உயர்க. "பிரியாத பேரொளி பிறக்கின்றவருள் அருட் பெற்ருே.ர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமை யாய் வந்து பேசாமை ஆகும்.” (தாயுமானவர்) தெளிந்த ஞானத்தால் கெய்த்திருவருளை அடைந்தவர்கள் உரிமையா அடையவுரியது பிறவாமையே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறியிருக்கிருர். பிறவி ஒழிவதே பேரின் பவழியாம். வினையின் விளைவாய் விரிந்து வந்த பிறப்பு வினையின் நீங்கி யானை நினைந்து உருகிப் புனிகம் அடைந்தவரின் புறமே ஒழித்து போகிறது. விதி உன்னை வெளியே விடாமல் பிறவியில் ஆழ்த்தி வகைத்து வருகிறது; தெளிவோடு சிந்தித்து அதனை வேரறுத்து ஒளியோடு உயர்ந்து கொள்ளுக; அதுவே இனிய கதி நிலையாம். - - = 903. எண்ணரிய தோற்றங்கள் எங்கும் பரவியுள மண்ணறிய வந்துள்ள மன்னுயிர்கள்-எண்ணியலுள் எண்பத்து நான்கிலக்கம் என்ன இயைந்துமே பண்பெற்றுளகாண் படிந்து. இ-ள். அளவிடலரிய உருவத் தோற்றங்கள் ஈண்டு யாண்டும் பரவி நீண்டு நிலவுகின்றன; அவை எண்பத்து நான்கு நூருயி ரம் கூருண பேதங்களாய் இசைந்து நிற்கின்றன என்க. உயிர் இனங்களின் வகைகளைத் தொகையா இது உணர்த் தியுளது. பிறப்பு நிலைகளே அறிவது பெரிய கலையாய் கின்றது. கண் எதிரே தோன்றுகின்ற உருவங்களை மாத்திரம் நாம் கண்டு வருகின்ருேம்; காணுதன. பல கோடிகள் உள்ளன. எண்ணி அறிய முடியாதபடி எல்லை கடந்துள்ள பிறவிகளுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/67&oldid=1327028" இலிருந்து மீள்விக்கப்பட்டது