பக்கம்:தரும தீபிகை 7.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.382 த ரு ம தீ பி. கை பொருளுலாம் சுவர்க்கம் ஆதி போகத்தால் புணியம் தீர்ப்பன்; மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்திய நாதன். (3) மருத்துவன் உரைத்த நூலின் வழிவரின் பிணிகள் வாரா; வருத்திடும் பிணிகள் தப்பின் தப்பிய வழியும் செய்யத் திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றும் தீர்ப்பன்; உரைத்த நாம் சிவனும் இன்னே உறும்கன்மம் ஊட்டித் தீர்ப்பன். (4) மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும் திண்னமா யறுத்துக் கீறித் தீர்த்திடும்; சிலநோய் எல்லாம் கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்; அண் ண அலும் இன்பத் துன்பம் அருத்தியே வினே யறுப்பன் (5) (சிவஞான சித்தியார்) இன்ப துன்பங்களே ஊட்டி வி ஃன க ளே நீக்கி உயிர்களை இறைவன் உயர் கதியில் உய்க்கும் நிலைகளை இது காட்டியுள் ளது. உருவக வுரைகளையும் பொருள் வகைகளையும் கருதி நோக்கி உறுதி கலங்களை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். சீவர்கள் தேகங்கள் எடுப்பதும் போகங்களை நுகர்வதம் சோகங்களில் உழல்வதும் உண்மையான உய்தி நிலையை உண ராமல் மோகங்களில்விழ்ந்து எகமாய்க்களிப்பதும் மாயக்கூத்து களாப் மருவி மாயாத பிறவிக் துயர்களை விளக்கி நிற்கின்றன. அமைதியான தாயசிந்தனையோடு நேயமா ஆழ்க்கஆப்க்க கூர்ந்து தெளியின் ஆன்ம உப்தி மேன்மையாய் வெளியாம். == ജബ 904. செய்த வினேவிளைவைச் சேர்ந்து நுகரவே வையமுதல் வானமெலாம் மன்னுயிர்கள்-மெய்கள் அடைந்து திரிகின்ற அப்போகம் தீர்ந்தால் உடைந்து மறையும் ஒருங்கு - (+) இ-ள். தாம் செப்த வினைப் போகங்களை நுகர்ந்து கழிக்கவே பூகலம் மீதலம் பாதலம் முதலாக யாண்டும் உடல்களே மருவி உயிர்கள் கிரிக்க வருகின்றன; அவை முடிந்து போனல் இவை யாவும் ஒருங்கே மறைந்து உரிமையில் கலந்து போம் என்க. பிறவிகள் காரண காரியத் தொடர்புகளாய் வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/73&oldid=1327034" இலிருந்து மீள்விக்கப்பட்டது