பக்கம்:தரும தீபிகை 7.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி ற ப் பு 2898 ஒழிகிருன். தீயவாசன பிறவிகள்தோறும் தொடர்ந்து பெருங் துயரங்களையே விளைக்கும். அளயவழியில் பழகிச் சுகம் பெறுக. 908 கனிமரம்போல் யார்க்கும் கனிந்து புனிதர் இனியவ ராகி இருப்பர்-துணிமிகுந்த எட்டி மரம்போல் இழிமக்கள் எவ்வழியும் கெட்டதே செய்வர் கிளர்ந்து. )عy( இ-ள். இனிய கனி மரம் போல் எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து செவ்விய புனிதர் சிறந்து திகழ்கின்ருர்; வெவ்விய தியர் எட்டி மரம்போல் எவ்வழியும் கெட்டகேசெய்து கேடாப் நிற்கின்ருர். நல்லவர் நிலையும் தீயவர் புலையும் தெரிய வந்தன. ஒருவன் பிறந்த பிறப்பு சிறப்பாப் உயர்ந்து விளங்குவது அவனுடைய இனிய குண நீர்மைகளாலேயாம். மனம் மொழி மெய்கள் புனிதமாப் இனிமை கோப்ந்து வரவே அவன் ஒரு மனித தெய்வமாய்த் தனி மகிமை வாய்ந்து திகழ்கின்ருன். அன்பும் பண்பும் நிறைந்த உள்ளம் கனிந்து உயர்ந்தபோது அந்த மனிதனை உலகம் விழைந்து புகழ்ந்து வருகிறது. அரும்பு மலர் காப்கள் மரங்களில் நிறைந்திருக்காலும் கனிகள் விளைந்த பொழுது கான் பறவைகள் அங்கே விரைந்து வருகின்றன. இனிய பலன்கள் எவ்வுயிர்க்கும் இன்பம் தருகின்றன. அயலார் உவந்து வாழ இயல்பாப் இசைக்து வாழ்பவன் சமுதாயத்தில் உயர்வா இசைபெற்று ஒளி வீசி மிளிர்கின்ருன். நல்ல நீர்மைகள் உள்ளத்தில் சுரந்துவரின் அந்த மனிதன் உலகத்தில் உயர்ந்து திகழ்கிருன். பிறந்த ஒருவன் பெருந்தகை யாளன் என்று விளங்கி வருவது சிறந்த பேரும். சொல்லும் செயலும் கல்லனவாயின் அவனே எல்லாரும் உள்ளம் உவந்து போற்றுகின்றனர். அவனுடைய கருமங்கள் தருமங்களாம். குளிர் கிழலைத் தக்து இனிய கனிகளை உதவி உயிரினங் களுக்கு இயல்பாகவே இதம் புரிந்து வ ரு த லா ல் கொடை வள்ளல்களுக்கு மரங்கள் கேரே உவமானங்களாய் வந்தன. 300

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/84&oldid=1327045" இலிருந்து மீள்விக்கப்பட்டது