பக்கம்:தரும தீபிகை 7.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2400 த ரும பிேகை நினைவு செயல்களால் வினைகள் விளைகின்றன; அவை நல்லன. வாயின் புண்ணியங்களாய் இன்பங்களை அருளுகின்றன; இயன வாயின் பாவங்களாப்த் துன்பங்களே கருகின்றன. இரு வினை களும் மருவியே மனிதன் பிறந்துள்ளான் ஆதலால் சுக தக்கங் களை எவ்வழியும் அவன் அனுபவிக்கின்ருன். வினையால் விளைந்து வினேப் போகங்களை நுகர்ந்து வருதலால் தேகம் வினைப்போகம் என நேர்ந்தது. ஊழ்வினையே உயிர் வாழ்வில் உலாவி வருகிறது. Life is a bumper filled by fate. (Blacklock) உயிர் வாழ்வு விதியால் நிறைந்த ஒரு பாண்டம் என்னும் இது ஈண்டு ஒர்ந்து உணரவுரியது. அயல் நாட்டு அறிஞரும் வினையின் விளைவுகளை எண்ணி வருவது வி ய ப் ைப விளேத்து வருகிறது. கரும பிண்டம் மருமமாக் காண வந்தது. மண் பாண்டம் போல் மனித தேகம் மருவியுளது; எப்படி யும் உடைந்து போப்விடும், அது உடையு முன்னரே அடைய வேண்டியதை விரைந்த அடைந்து கொள்ள வேண்டும். மண்ணின் கலம்போல் மருவிய தேகமே கண்ணிமைபோல் ஆவியைக் காத்துளகாண்-கண்ணியது கிற்கும் பொழுதே கிலேயான பேரின்பப் பொற்குன்றம் காண்க புகுந்து. இதன் பொருளேக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ளுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பிறவி வினையின் வழி விளைந்தது. அளவிட லரிய நிலைகளை புடையது. வினைப் போகங்களை நுகர வந்தது. .முடிக்கால் ஒழிக் த போவது اتنی | تھے۔ மனிதப் பிறப்பு மகிமை வாய்ந்தது. பழகிய வாசனை கிழமையா அமைந்தது. நல்ல பழக்கம் கலம் பல தரும். கெட்ட வாசனை கேடே விளேக்கும். துயரங்களே பிறவியில் பெருகி யுள்ளன. பிறவிப்பயன் பிறவா இன்பம் பெறுவதே. கூக-வது பிறப்பு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/91&oldid=1327052" இலிருந்து மீள்விக்கப்பட்டது