பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


விண்வெளியில் மணி பார்த்து நடக்கத் தொடங்கிவிட்ட காலம் இது! ஆனல், எனக்குக் கப்பல் கூடச் செய்து பழக்கம் கிடையாது. என்ருலும் உங்களிடம் ஒர் உண்மை யைச் சொல்லிவிடுகிறேன். காகிதக் கப்பல்களை எத்தனை குரோஸ் வேண்டுமானுலும் செய்து தரு வேன், சினிமாக்காரர்களும் 'ஆர்டர்’ தரலாம். இப்போதுதான் எந்தக் கப்பலாக இருந்தாலும் சினிமாவில் ஒரு மவுஸ் பிறந்திருக்கிறதே! "பறவைக் கப்பல்” என்று பட்டிக்காட்டில் ஒரு கப்பல் உண்டு. அது என்ன தெரியுமா? அதுதான் ஏரோப்ளேன்! - உலகத்திலேயே மிகப் பெரிய இயற்கைத் துறை முகம் சென்னைத் துறைமுகம் தாளுமே! சரிதானே? அந்நாளில் சரித்திரப் புகழ் கொண்ட மன்னர்களுக் கெல்லாம் ஒவ்வொரு கடற்கரையும் கை கொடுத்து வந்திருக்கிறதல்லவா? - சாதாரனமான அளவைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகக் கஷ்டப்பட்டால், உடனே அந்த நபரை திசை தெரியாமல் நடுக்கடலிலே தத்தளிக்கும் கப்பலுக்கு உவமை காட்டி எழுது வார்கள் எங்கள் தோழர்கள். திசை தெரியாமல் ஏன் கப்பல் தத்தளிக்க வேண்டும்? அதற்குத்தான் திசை சொல்ல கடற்கரைச் சுழல் விளக்கும் உள்ளனவே? சிந்த்பாத். கலிவர் போன்ற மேலை நாட்டு வீரர்களின் சாகஸ்ங்களுக்கு இந்தக் கப்பல்களும்