பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

நமக்குச் சிபார்சு செய்யப்பட்டிருப்பதை கண்டு, நாம் நமக்கு வரவேண்டிய ஒரு பைசா, இரண்டு பைசாக்களை, பயந்து கொண்டு காக்கிச்சட்டைக்காரரிடம் கேட்டாலோ, அவர் இறங்கும் வழியையும் நம்மையும் ஒருமுறை முறைத்துப் பார்ப்பார்! நமக்கோ அதற்கப்பால், அந்த 'வேண்டுகோள்' பலகையை ஏறெடுத்துப் பார்க்கக்கூட திராணி ஊறுவதில்லை.

"அறஞ்செய்ய விரும்பு" என்று ஒளவையாரோ யாரோ சொல்லிலோ, பாடியோ இருக்கிறார்களா? அதற்காக, அறம் செய்ய முடியாதவர்களின் தர்மசங்கடமான கதி என்ன என்பதைப் பற்றி யாரும் அனுதாபப்பட்டதாகவே தெரியவில்லை.

"புலிக்குப்பிறந்தது பூனையாகப் போகுமா?" என்பது ஒரு பழமொழி. அதைச்சோதித்துப் பார்ப்பதற்காக, ஒரு புலியையும் அதற்குப் பிறந்த ஒரு குட்டியையும் தேடிப்போகும் தர்மசங்கடத்தை யாரும் சிரமேற்கொள்ளார் என்றே தோன்றுகிறது. உங்களில் யாருக்காவது விருப்பம் இருந்தால், தாராளமாய் முயன்று பார்க்கலாம்! முயற்சி மெய் வருந்தக்கூலி தருமாம்!

காப்பி சாப்பிட ஒரு ஹோட்டலுக்குள் பிரவேசிக்கிறோம். "இங்கே செய்த பட்சனங்கள் அசல் நெய்யில் செய்தவை அல்ல!" என்று விளம்பரமொன்று ரொம்பவும் தயவுடன் பரிதாபக்குரலில் செப்புகின்றது. நாம் அசல் நெய்ப்பலகாரம்தான்