பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


ஆனால் வேதனை மண்டிய விரக்திச் சிரிப்புக்குப் பஞ்சமே கிடையாது. விசித்திரமான பிறவி என்கிறீர்களா? 'உலகம் யாவும் தானாகி, புறமாகி, அறம் ஆகி' நிற்பவனையே அனுதாபப் பொருளாக்கிக் கொண்ட இந்தத் தெய்வம் அற்புதப் பிறவியோ என்னவோ? ஆனால் 'வேண்டாத பிறவி' யல்ல! முதல் பிரம்மாவுக்குப் போட்டியாக முளைத்த இரண்டாவது பிரம்மாக்களையெல்லாம் மண்ணைக் கவ்வச் செய்யும் சாகஸம் இந்த மூன்றாவது பிரம்மாவுக்கு உண்டு!

தன்னை ‘மேக்கப்' செய்து கொள்ளத் தெரியாவிட்டாலும், இவனது 'மேக்கப்'பின் கீழே கொள்ளை கொள்ளையாகத் தயாராகும் விஷயங்கள் எத்தனை எத்தனையோ? வாழ்க்கையில் கூடிப் பிரியும் அரைப் புள்ளி, கால்புள்ளிகளெல்லாம் இந்த அப்பாலியிடம் முற்றுப் புள்ளியின் கௌரவத்தைச் சம்பாதித்துக் கொள்ளத் தவறுவது இல்லை. இவன் வாழ்க்கையில் அரை 'எம்' அளவு நிம்மதிக்கும் வழி கிடையாதென்றாலும், கஷ்ட நஷ்டங்களை 'லெட் அவுட்' ஆக்கி விடுவதில், மண்டை ஓடேந்திய பிச்சையாண்டிகூட இவனிடம் பிச்சைவாங்கத்தான் வேண்டும். இவனுடைய நடப்பு வாழ்க்கை அசல் காலி ப்ரூப்' தான். ஆனால், யந்திரத்தில் ஓடும் பார'த்தின் தெளிவு இந்த மனித யந்திரத்திடம் ரொம்ப ரொம்ப உண்டு. ஆக்கல், அழித்தல் — ஏன், படைப்புத் தொழிலின் ரகசியமே இவன் கைக்குள் தான் அடக்கம்! துயரங்கள் 'லாக்கப்'பாகக் கிடந்த போதிலும் - பாக்டரி சட்டத்தில்