பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


சட்டமில்லாத படமாகி ஒற்றைக்கால் தவம் புரிந்தாலும் - ஸி ங் கி ள் சா யா விற்குள் தன் வாழ்க்கையையே அடக்கி இந்திர ஜாலம் புரியும் இந்தக் கடவுளுக்கு ஒரு ஜிந்தாபாத் ஆகிலும் போட வேண்டாமா? 一★一 3. அசல் பிரம்மா அல்ல! "சாகத் துணிந்தால், பேனவைக் கையில் எடு!” அதிசயமான இந்த எச்சரிக்கை, வாழ்க்கையிை வேதாந்தமயமாக ஆக்குவதற்கா? அல்லது பாவம், அந்த அப்பாவிப் பேணுவின் மீது அபயம் என்ற அறிவிப்பை ஒட்டிவைப்பதற்கா? அல்லது மேற்படி பொன் மொழியை உளறிக் கொட்டிய 'திர்க்கதரிசி’ யின் கோழைத்தனத்துக்கு இது ஒரு நினைவு மண்டபமா, என்ன? "முதல் பிரம்மாவைக் காணவில்லை. நான்முகன் என்ற புனைப் பெயர் உண்டு. பேளுப் பெயருக்கு பங்கம் விளைவிக்காத வகையில் கனகச்சிதமாக இரு ஜோடி முகங்கள் உண்டு. உயிர்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஏகபோக உரிமைக்காரன். அந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துக் கொடுப்