பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


துணை நின்றிருக்கின்றன என்பதை சிறுவர் உலகம் மறக்க முடியுமா, என்ன?

மனிதர்களுக்குத்தான் “கால்கட்டு” போடுவதென்றில்லை. கப்பல்களுக்கும் “கால்கட்டு” போடுவார்கள். இதற்குப் பெயர்தான் “நங்கூரம் பாய்ச்சல்” என்பது.

கப்பல் சண்டைகளைப் பற்றிப் பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை எழுதியதில்லை. இப்போது எழுத ஆசை ஓடுகிறது. ஆகவே நேயர்களுக்குத் தெரிந்த கப்பல் சண்டைகள் ஏதாவது எங்காகிலும் நடந்தால், எனக்குத் தயைசெய்து சேதி சொல்லி அனுப்ப வேண்டும்!

கப்பலில் பயணப்படுபவர்களே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: கடல் பிராணிகள் தாம் காப்பாற்ற வேண்டும். கடலோடு கடலாக நய வஞ்சகமாய் மறைந்திருக்கும் திட்டுக்கள்தாம் காப்பாற்ற வேண்டும். எங்களூரில் பெரிய பணக்காரி அஞ்சுகத்தம்மாள். அவளைப் பார்த்து எங்கள் பெண்டுகள், “ஒனக்கென்னடி ஆத்தா! கடலைப் போல வூடும் கப்பலைப் போல சொத்தும் இருக்கு!” என்பார்கள். ஆனால் ஓர் ரகசியம் என்னவென்றால், அந்த அம்மணிக்கு இவ்வுவமையில் ஏகப்பட்ட குதூகலம் பீறிட்டுக் கிளம்பிவிடும். ஓர் உண்மை என்னவெனில், அந்த அம்மாள் நாளது பரியந்தம் ஒரு கடலலையோ, அல்ல்து ஒரு கப்பலையோ தரிசித்த தில்லை!