பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. "ஒரம், ஒரம்.” கோடை வெயில். தார் உருகி ஓடுகிறது. கையில் உயிர் பிடித்து, மானிடன் ஒருவனை ஏந்தி, நடமாடி ஓடிவரும் இந்த மனித தெய்வத்தை நீங்கள் யாராவது கண்டதுண்டா? இவன் தெய்வம்; ஆனால், மாறிக் குதிக்க ஜதி பயிலவில்லை. லயம் தவருமல் கால்கள் மாறி மாறி ஆடுகின்றன. காரணம்: தாளம் என்கிறீர்களா? அதுதான் தவறு சிருஷ்டித் தவறு. உருகும் தார்; படை அஞ்சும் சூடு, வெயில்; வாங்கும் கூலி! கொட்டுகின்ற மழையா? படை பதைக்கின்ற கோடையா? கண் தெரியாத இருட்டா? மண் தெரியாப் பாதையா?- உங்களுக்கெல்லாம் எங்கே செல்லவேண்டும்? இதோ ஒரு மார்க்க பந்து-வழித்துணை மன்னன் -வழிகாட்டி-பத்திரமாய் உங்களைப் பாதுகாத்துச் சேர்ப்பிக்கும் மகாவிஷ்ணு. அவனுடைய சேஷ சயனம், படியளக்கும் நிதி மனைவி மகாலக்ஷ்மி யெல்லாம் அந்த அரியாசனம் ஒன்றேதான்! பாதை தெரியாத பாலகன் முதல், பாதை தெரிந்த பருவ மங்கை வரை நகரிலே நடமாட தான் நடமாடும் அசல் தெய்வம் இது. அரகர சம்போ மகாதேவா!