பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


ஆணு ஆவன்ன படிச்சார்: தஞ்சாவூர் கலெக்டருக்கு நான்தான் அட்சராப்யாசம் சொல்லித் தந்தேன்!' எல்லாம் சரிதான்!-இவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்கள் : ஆம் :இந்தக் கண்கண்ட ஆண்டவ னின் கைப்பிரம்பின் மகிமை அது! ஆனால், இந்தத் தெய்வத்திற்கு மாத்திரம் ஒட்டுப்போட்ட பழைய கோட்டும் டர்பனும் அழியா வரம் பெற்றவையோ! ஒருவேளை, இதற்குக் காரணம், சிஷ்ய கோடி களிலே ஏகலைவன் ஒருவன் கூட வழி தப்பிப் பிறக்க வில்லேயே என்பதா?...இல்லையென்ருல், எழுத்தறி வித்தவன் இறைவன்' என்ற ஒரு வரிப் பாடலுக்குச் சரியானப் பொருள் சொல்ல உரையாசிரியர் யாருமே இப்பூவுலகில் இன்னமும் ஜனனம் எடுக்க வில்லையே என்பதா...? பிரம்பே உனக்கு என் அந்தரங்க சுத்தமான அன்பு வணக்கங்கள். அதுவே இந்த ஏழையின் குரு காணிக்கை! சட்டமே! பிரம்பு அலறுகிறது: அதன் அலற லுக்கு ட்யூன்” போட வேண்டியது தற்சமயம் அவ்வளவு முக்கியப் பிரச்சனை அல்ல. முதலில் அந்த முகாரிக்கு முற்றுப்புள்ளி இட ஆவன செய்...? ー★ー