பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 31 காட்டிய உட்பொருளை-அந்த உட்பொருள் உள்ள டக்கிக் காண்பித்த அபாய அறிவிப்பை அப்போதே நான் அறிந்து கொண்டேன்; உணர்ந்தும் கொன டேன். இல்லையென்ருல். அபாய அறிவிப்பு விய வகாரத்தைப் பற்றி இப்படிப்பட்ட ஆராய்ச்சியை நடத்த எனக்கு இன்று இப்படிப்பட்ட துணிவு வந் திருக்குமா, என்ன?-நீங்களே சொல்லுங்களேன்! வாழ்க்கை என்பது ஒரு தத்துவம். அந்தத் தத்துவம், வாழ்க்கையை வாழ்க்கையாக விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொள்ளுவதற்குரிய சோதனை யாகவும் அமைகின்றது. சோதனை என்ருல், வெறும் சோதனைமட்டும் அல்ல; அச் சோதனையே ஒர் எச் சரிக்கையாகவும் அமைந்திருக்கிறது. அதனுல்தான், நான் அந்த முதற் பாவைச் செவிமடுக்கும் பாக்கி யத்தைப் ‘பச்சை மண்ணுகப் பதவி ஏற்ற தருணத் திலேயே பெற்றிருந்தேன் போலும்! பாட்டைக் கேட்கும், பாக்கியம் பெற்றிருந்தது பெரிய அதிசயம் அல்ல; ஆனால், அப்பாடலே இந்தத் தாத்தா பதவி வரையிலும் இன்னமும் மறக்காமல் இருக்கின் றேனே, அதுவே ஒரு பெரிய அதிசயம்தானே?அந்த அதிசயத்திற்குக் காாணம், அப்பாடலிலே பொதிந்துள்ள அபாய அறிவிப்புப் பண்புதான் என்ற சிதம்பர ரகசிய"த்தை நான் உங்களுக்குத் திருவாய் மலர்ந்தால், நீங்களும் அதிசயப்படாமல் இருக்க முடியாதல்லவா? - அந்த முதற் பாடலை மீண்டும் நினைவு படுத்தப் போகிறேன். தயை புரிந்து மன்னிக்கத்தான்