பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R 23 வாழ்க்கையின் இந்த உண்மையை-நியதியை அவ் வப்போது நமக்கு எடுத்துரைப்பதற்குத் தானே. என்னவோ, மண்டை ஒட்டின் பயங்கரச் சித்திரத் தைப் போட்டு, அதனடியில்! அபாயம்! என்ற எச் சரிக்கையும் எழுதி, மின்சார இருப்புச் சந்திகளிலே தொங்க விட்டிருக்கின்ருர்களோ?! அபாயம்தொடாதே! என்ற கட்டளைக்கு அடிபணியாமல் இருந்தால், அப்புறம் நமக்கு நம்முடைய மண்டை ஒடுகள் தாம் மிச்சம் கிடைக்கும்! அபாய அறிவிப்பும், எச்சரிக்கையும் இரட்டைப் பிள்ளைகள் மாதிரிதான். ஒன்றுக்கு ஒன்று ஆதார மாகவும் ஆதரிசமாகவும் இயங்கி வருகின்றன; இயக்கப்பட்டும் வருகின்றன. இதுவே சிருஷ்டிக்கு உகந்த தார்மீகப் பண்பாடாகவும் இலங்குகின்றது. இந்நிலைக்கு உதாரணம் சொல்ல, எத்தனையோ விஷயங்கள் காத்திருக்கின்றன. நமக்கு விதிக்கப் பெற்ற வாழ்வின் பயணத் தைத் தொடங்கவேண்டி, நாம் பயணத்தை மேற் கொள்வது உண்டல்லவா? அப்படிப்பட்ட பயனத் தின்போது, நமக்கு எச்சரிக்கைகள் விடுக்கும் சூழ் நிலைகள் எத்தனை எத்தனையோ உண்டுதானே! அபாய அறிவிப்புக்கள் நமக்கு வாய்த்திட்ட ஆசான் மாதிரி; அதாவது, தட்சணை விரும்பாத குருமாதிரி நாம் அவசரம் அவசரமாக வீதிகளிலே நடந்து கொண்டிருப்போம். ஒரு திருப்பம் வரும். பஸ்கள் திருப்பம் என்று பாராமல் அவற்றிற்கே உரித்தான வேகத்துடன்- ஐந்து மைல் வேகம்’ என்ற சிவப்பு