பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 34 எழுத்து எச்சரிக்கைப் பலகையையும் அசட்டை பண்ணிவிட்டு ஓடோடி வரும். நம் விதி நம்மைக் காப்பாற்றியிருக்கும். பிறகுதான் நமக்கு ஞானே தயம் வரும்; தலையை நமிர்த்திப் பார்த்தால், 'நில், கவனி, நட!' என்ற அழகான தூய தமிழ் வசனம் நம்முடைய அருமை மிகு விழிகளிலே தென் படும். போன உயிர் மீண்ட மகிழ்வும் பிறக்கும். அந்த எச்சரிக்கைப் பலகையின் அடியில் இன்னும் என்ன வெல்லாமோ உபதேசங்கள் பொறித்திருக் கும். அவற்றையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்க நமக்கு நேரம் இருக்காது; மனமும் இருப்பதில்லை. நமக்குத்தான் தலை போகிற அவசரத்துக்கு மட்டும் ரேஷன் இருப்பது கிடையாதே! ஆனல் ஒன்று மட்டும் உண்மை. தலை தப்பியது தம்பிரான் புண் னியம்!’ என்ற உள்ளுணர்வு மாத்திரம் நம்மையும் அறியாத விதத்திலே நமக்குள்ளே ஊடாடிக் கொண்டேயிருக்கும். நடந்துகொண் டே யி ரு ப் போம் மீண்டும். ஆல்ை, திரும்பிப் பார்க்க மட்டும் மீண்டும் நமக்குச் சிந்தனை ஏற்படவே ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டால் தான். மறுபடியும் அந்த எச்சரிக்கையை நாம் நெஞ்சிலும் நினைவிலும் பதிய வைத்திருப்போமே!. "திரும்பிப் பார், மனிதா - திரும்பிப் பார்! திருந்தப்பார், உன்னை நீயே திருத்தப்பார்" பழைய நாடகமொன்றிற்கு நான் எழுதிக் கொடுத்த இந்தப் பாட்டின் "பல்லவி என்னுடைய வாழ்க்கை அனுபவம் எனக்கு அடிக்கடி சிவப்புக்