பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லும் சொல்லாதோ? ஒளவைப்பாட்டி பாடிய இளமையில் கல்' என்ற அந்த ஆத்திசூடிப்பாடலை இளமை விடை பெற்ற பின்னர்தான் நான் தெரிந்துகொள்ள முடிந்தது. இப்படியொரு பாடல் உண்டென்னும் ரகசியத்தை யாராவது பெரிய மனசு வைத்து அடியேனிடம் முன்கூட்டியே கோடிகாட்டியிருந் தால், இளமையிலேயே அப்பாட்டைக் கற்றுக் கொண்டு, பாட்டிற்குக் கவுரவம் அருளியிருக்க மாட்டேன: இளமையை விட்ட குறையோ, அல்லது இளமை கழிந்த பிற்பாடு அப்பாட்டினைத் தொட்ட குறையோ, இப்போது எனக்கு எல்லா விஷயமும் ரொம்பத் தெரிந்திருக்கிறது. அவ்வளவு தெரிந்து கொண்ட காரணத்தினுல்தானே என்னவோ "இளமையில் கல்' என்கிற பாவில் உள்ள 'கல்' என்ற சொல்லை மட்டும் நான் பற்றுடன் பற்றிச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள நேர்ந்திருக்கிறது. அதன் விளைவுதான் இந்தக் 'கல்' ஆராய்ச்சி!... அப்பொழுது எனக்கு வினத் தெரியாத பருவம். யாரும் விஞபோட்டால் விடை சொல்ல 'திரு திரு வென்று விழிக்கும் பருவம் போலும! மழை கொட்டுகொட்டென்று கொட்டிக் கொண் டிருந்தது. வாசலில் எட்டிப்பார்த்தால் 'ஐஸ் ஃப்ரூட் காரன் அனதை ரட்சகளுகத் தரிசனம் கொடுத்து நின்ருன். நான் அளுதையல்ல என்ற தைரியத்தில், உடனே தொண்டையைச் சரிப்படுத்