பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


கல்லினுள் தேரைக்கும் கர்ப்பை உயிர்க்கும் புல்லுணவு தந்து போற்றுகிருளும் தயாளனை கடவுள். இந்தச் சிருஷ்டியின் அதிசயம் நாளது வரை எனக்கு விளங்கவே மாட்டேனென்கிறது. படைப்புத் தத்துவத்திலேயே கல் அமர்ந்து இமா லயப் புகழ்பெற்று விளங்குகிறதென்ருல், கல்லை நான் கடவுளாகத் தொழாமல் தப்பமுடியுமா? சரித்திரம் திரும்பவும் நடக்கிறது” என் ருெரு வாசகம் உண்டல்லவா? இவ்வுண்மைக்கு ஆத்ாரமாகத்தான். கடல் மல் லே ச் சிற்பங்களும் அஜந்தா, எல்லோராச் சிற்பங்களும் கல்லாகவும் கலையாகவும் பரிணுமம் பெற்றுச் சிரஞ்சீவிப் புகழ் பெற்றுத் திகழ்கின்றனபோலும்! புதைபொருள் ஆராய்ச்சியில் இந்தக் கல் பெறுகிற மதிப்பே அலாதி! வழியில் கிடக்கும் கற்களை நாம் மதிக்காமல்மதிக்கத் தெரியாமல் எற்றிவிட்டு நடக்கிருேம். ஆனல் அவை சிற்பியின் கைவண்ணம் பெறும் போதுதான் ந ம க்கு அந்த வெறும் கற்களின் மகிமை தெரிகிறது! கல்லில் பிறந்த கதைகள் ஒன்ரு இரண்டா? இல்லை, கல்லில் பிறந்த கடவுள்கள் ஒன்ரு, இரண்டா? எறும்பு ஊறக் கல்தேயும் என்கிருர்கள், கண் டவர்கள். கரைப்பார் கரைத்தால், கல்லும் கரை யும் என்றும் சொல்லப்படுகிறது. கல்லைக் கரைத்த த்தர் இனம் இவர்களுக்குச் சொந்தமாக இருக் க்கூடும் கல்லையும் மண்ணையும் சோருக ஆக்கிப்