பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 எதற்கும் மசியாதவனே கல்லுளி மங்கன் என்பார்கள் பெரியோர்கள். கல்லுக்குச் சிற்றுளி போதும். கல் கவிபாடும்; கலைகாட்டும் கல்...கல்! என்ற நாதமே கல்லினின்று பிறந்த் ஞானலயப் தான். கல்லூர்' என்று ஒர் ஊர் அறந்தாங்கிகாரைக்குடி பஸ் வழியில் உள்ளது. இங்கே பெரும் பாலான மனைகளுக்குக் கற்கள்தாம் சுற்றுச் சுவர் களாகி உள்ளன. மாவுக் கல் பண்டங்களும் மாவுச் கல் கோலங்களும் இப்போதும் புழக்கத்தில் இருக் கவே செய்கின்றன. இன்னென்று: பிறந்த நாட்டுக்காகத் தங்களது இன்னுயிர் களை ஈந்த மாவீரர்களை வியந்துபோற்றி ஏற்றினர் மக்கள். கல் எடுத்து அவ்வீரர் தம் நினைவுக்குச் சின்னங்கள் எழுப்பினர். அக் கல்லில் வீரர்களின் பெருமைகளையும் பெயர்களையும் குறித்தனர். மயிற் பீலியும் மலர்மாலையும் சூட்டித் தொழுதனர். இவ் வகையான வழிபாட்டுக்கு-பாராட்டுக்கு நடுகல், நிகழ்வுகள் அடிக்கல் பரப்புகின்றன. கோப்பெருஞ் சோழனின் நடுகல்லைக் கண்டு, பொத்தியார் எனும் புலவர் பாடிய பாடலை புறநானூறு சொல்லும். வைகம் வம்மோ வாய்மொழிப் புலவிர் நனந்தல யுலகம் அரந்தை தூங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் லாயினன் புரவல னெனவே..."